Tuesday, July 19, 2011

வடக்கில் அமைதியான நீதியான தேர்தலை முன்னெடுக்க ஏற்பாடு-மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார்!

Tuesday, July 19, 2011
வடக்கில் அமைதியான நீதியான தேர்தலை முன்னெடுக்க ஏற்பாடு-மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார்!

வடபகுதியில் அமைதியான தேர்தலை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் திருப்தியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

நீதியான, சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கான அனைத்துப் பணிகளும் திருப்திகரமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.போதுமான அளவு அதிகாரிகள் வெளியிடங்களில் இருந்து வரவழைக்கப்படவுள்ளதுடன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மேலதிகமாக பொலீஸ் பிரிவினரை ஈடுபடுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதி தேர்தல் நடாத்தப்படவுள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் 449234 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருப்பதுடன், 3 நகர சபைகளுக்காக 29 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.மேலும் 13 பிரதேச சபைகளுக்காக 172 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

No comments:

Post a Comment