Sunday, July 17, 2011

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அமர்வு நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன!

Sunday, July 17, 2011
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அமர்வு நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அமர்வின் போது இறக்குமதி செய்யப்பட்ட தரங்குறைந்த பெற்றோல் தொடர்பான தொடர்பான விரிவாக ஆராயவுள்ளதாக கட்சியின் செயலாளர் திஸ்ச அத்தநாயக எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று நியமிப்பது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த விடையம் குறித்து ஆராய கனிய எண்ணெய் வள துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மூன்று உறுப்பினர்களை கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் செயலாளரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவினர், தரங்குறைந்த பெற்றோல் இறக்குமதி தொடர்பாக விரிவாக விசாரணைகளை மேற்கொள்ளவர் என அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த குழுவின் அறிக்கை எதிர்வரும் இரண்டு வார காலத்திற்குள் அமைச்சரிடம் கையளிக்கப்படும் என பிரதியமைச்சர் சரண குணவர்தன எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

No comments:

Post a Comment