Wednesday, July 20, 2011

சர்வதேச விசாரணை அவசியம் சர்வதேச முரண்பாடுகளுக்கான நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது!

Wednesday, July 20, 2011
இலங்கை அரசாங்கத்தின் இராணுவமும், புலிகள் அமைப்பும் மேற்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்செயல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையொன்றை நடத்த வேண்டியதின் அவசியத்தை சர்வதேச முரண்பாடுகளுக்கான நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆசிய வலயத்தை உள்ளடக்கும் வகையில் அந்தக் குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய நிர்வாகம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கவனம் செலுத்தாது முன்னெடுக்கும் நடவடிக்கைகள் காரணமாக இலங்கையின் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு முன்னொருபோதும் இல்லாதவாறு விலகிச் செல்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அனைத்து சமூகங்களும் எதிர்நோக்க நேரிட்ட அநீதிகள் குறித்து ஆராய சுயாதீன ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என சர்வதேச முரண்பாடுகளுக்கான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் கையாள வேண்டிய சில நடைமுறைகள் தொடர்பான பரிந்துரைகளையும் அந்தக் குழு முன்வைத்துள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்கவிடம் வினவிய போது, சர்வதேச முரண்பாடுகளுக்கான நிறுவனம் இலங்கை விவகாரத்தில் தலையிடுவதற்கு நீண்டகாலமாக முயற்சித்து வருவதாக கூறினார்.

குறித்த அமைப்பு நாட்டில் நியமிக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என்றால் விசாரணைகளை நடத்தவேண்டிய தேவை இலங்கைக்கு கிடையாது என அவர் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment