Monday, July 18, 2011

மும்பை தாக்குதலில் தொடர்புடைய முஜாகிதீன் தீவிரவாதி ஆரூண் பிடிபட்டான்; கொல்கத்தாவில் பதுங்கி இருந்தவன் சுற்றி வளைப்பு!

Monday, July 18, 2011
மும்பையில் கடந்த புதன்கிழமை நடந்த தொடர் குண்டு வெடிப்பை இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நடத்தி இருப்பது உறுதி படுத்தப்பட்டு வருகிறது. தேசியபுலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்கள் இது வரை நடத்தியுள்ள விசாரணைபடி, தலிபான்கள் உதவியுடன் இந்திய முஜாகிதீன்கள் மும்பையில் நாசவேலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் உள்ள மூத்த முஜாகிதீன் தலைவர்களில் கொல்கத்தாவை சேர்ந்த ஆரூண் என்பவன் குறிப்பிடத்தக்கவன். இவன் தலிபான் தலைவர்களுடன் நேரடி தொடர்பு வைத்திருப்பவன். இவன் ரியாஸ் என்ற தீவிரவாதியுடன் அடிக்கடி மெயில் மூலம் பேசிக் கொள்வது உண்டு. கடந்த மாதம் ரியாஸ் போலீசாரிடம் பிடிபட்டான். அதன் பிறகு கொல்கத்தா ஆரூண் பற்றி பல்வேறு புதிய தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன.

இந்தியாவில் உள்ள இளைஞர்களை மூளை சலவை செய்து, அவர்கள் மனதை மாற்றி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு அனுப்பி, ஆயுத பயிற்சி பெற வைப்பான். பிறகு அவர்கள் மூலம் இந்தியாவில் நாசவேலை செய்வான். மும்பை நாசவேலையில் கூட இவனுக்கு முக்கிய பங்கு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

கொல்கத்தா ஆரூணை பிடிக்க அதிரடிபடை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஆரூண் கொல்கத்தாவில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் பதுங்கி இருக்கும் தகவலை குஜராத் மாநில உளவுப் படை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த தகவலை அவர்கள் மும்பை குண்டு வெடிப்பு பற்றி விசாரணை நடத்தும் போலீசாரிடம் கூறினார்கள்.

அதன் பேரில் அந்த பகுதிக்கு சென்ற போலீசார் ஆரூணை கைது செய்தனர். அவனை தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த மூத்த தலைவர்கள் 21 பேர் மாயமாகி விட்டனர். கடந்த 4 நாட்களாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் யாரையும் கைது செய்ய முடியவில்லை. அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தஞ்சம் அடைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அசதுல்லா கான் என்பவன் கராச்சி நகரில் சுதந்திரமாக சுற்றி வருகிறான். இந்த 21 தீவிரவாதிகளுக்கும் லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாதிகள் பாதுகாப்பு கொடுத்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment