Tuesday, July 19, 2011சட்டவிரோத ஆயுத உற்பத்திசாலையொன்றை காவல்துறையினர் சுற்றி வளைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வந்துரம்பா காவல்துறையினர் குறித்த சட்டவிரோத ஆயுத உற்பத்திசாலையை சுற்றி வளைத்துள்ளனர்.
பாதாள உலகக் கோஷ்டியினரால் இந்த ஆயுத உற்பத்திசாலை நடத்தப்பட்டு வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
16 போர் துப்பாக்கிகள், உள்ளுர் கைத்துப்பாக்கி, 5.56 மி.மி சொட் துப்பாக்கி, துப்பாக்கி ரவைகள் மற்றும் தோட்டாக்கள் போன்ற மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
ஆயுத உற்பத்தி செய்யப்பட்ட கட்டிடடத்தின் உரிமையாளரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த ஆயுத உற்பத்தி மற்றும் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டவர்கள் n;தாடர்பில் விசாரணை நடாத்துவதற்கு விசேட காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment