Tuesday, July 19, 2011

தவறான வழியில் தமிழ் மக்களை வழிநடத்த முற்படுபவர்களிடமிருந்து அவதானமாக இருக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்!

Tuesday, July 19, 2011
தவறான வழியில் தமிழ் மக்களை வழிநடத்த முற்படுபவர்களிடமிருந்து அவதானமாக இருக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் மக்களின் உரிமைகளையும், தேவைகளையும் தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் ஒரு போதும் பின்நிற்காது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வேலணையில் நேற்றையதினம் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த வேண்டுகோளை விடுத்தார். அங்கு மேலும் தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி கூறியதாவது,

தமிழ் மக்களின் பெயரைக் கூறி அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பெற்றுக் கொண்டு தமிழ் மக்களை பிழையாக வழிநடத்த சிலர் முற்படுகின்றனர். இதுவரை அவர்கள் பெற்றுக் கொண்ட கோடிக்கணக்கான பணத்திற்கு என்னவானது? தமிழ் மக்களுக்கு இதனூடாக என்ன செய்தார்கள்?

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களின் பிரச்சினைகளை என்னிடம் கொண்டுவருகிறார். அவர் முன்கதவு வழியாகவே நியாயமான பிரச்சினைகளை என்னிடம் கொண்டு வருகிறார். ஆனால், சிலர் தமிழ் மக்களின் பெயரைக் கூறி பின்கதவு வழியாக வந்து கேட்பவற்றை நான் வழங்கத் தயாராக இல்லை.

வடக்கில் என்ன செய்யவேண்டுமென்பது எமக்கு நன்றாகத் தெரியும். சங்குப்பிட்டி பாலம் கட்டப்பட்டு அது மக்களின் பாவனைக்குத் திறந்துவிடப்பட்டிருக்கிறது. ஏ-9 பாதை திறக்கப்பட்டுள்ளது. உங்களின் உறவினர்கள் சுதந்திரமாக இதில் பயணிக்கலாம். மின்சாரம், பாதை அபிவிருத்தி உட்பட உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் வடக்கில் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. இம்மக்க ளுக்குத் தேவையான வசதிகள் அனைத் தையும் செய்வதற்கு எமது அரசாங்கம் ஆயத்தமாக இருக்கிறது.

வடக்கின் வசந்தம் என்ற திட்டத்தின்கீழ் உங்கள் வாழ்க்கையை வசந்தமாக்குவதே எமது பிரதான நோக்கமாகும். உங்களின் பிள்ளைகளின் எதிர்காலம், கல்வி அனைத்தை யும் பூர்த்திசெய்வதே எமது குறிக்கோள். தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாப்பதற்கும் செயற்பட்டுவருகிறோம். வடக்கு மக்கள் மீண்டும் துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. வடக்கு மக்களின் உரிமை களைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசு அக்க றையுடன் செயற்படுகிறது. உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் ஒருபோது பின் நிற்காது.

நான் உங்கள் சொந்தக்காரன். நண் பனாக இருக்கிறேன். உங்களை நான் நம்புகிறேன். நீங்களும் என்னை நம்புங்கள். உங்கள் எதிர்பார்ப்புக்களை நான் பூர்த்தி செய்வேன். பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன் னணியே கைப்பற்றியுள்ளது. பெரும்பாலான மாகாண சபைகளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வசமே உள்ளது. பாராளுமன்ற த்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை யையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யின் வசம் உள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதியும் நானே. தமிழ் மக்களின் பிரச்சினைக்கும் தேவைகளுக்கும் உரிய தீர்வை வழங்குவதற் கும் எமது அரசாங்கம் ஒருபோதும் பின்நிற்காது”.

“மீண்டுமொரு பிரச்சினைக்கு தமிழ் மக்கள் முகம்கொடுக்க ஒருபோதும் நாம் இடமளிக்கப்போவதில்லை. 30 வருடகால யுத்தத்துக்குப் பின்னர் நீங்கள் நிம்மதியான வாழ்க்கையை அனுபவிக்கிaர் கள். இனிப் பயம் என்பது உங்களுக்குக் கிடையாது” என்று தெரிவித்த ஜனாதிபதி, இறுதியாக “வெற்றியின் சின்னம் வெற்றிலைச்சின்னம் அது உங்கள் வெற்றியின் சின்னம், உங்கள் பிள்ளைகளின் வெற்றியின் சின்னம்” எனக் கூறி தனது உரையை முடித்துக்கொண்டார்.

வேலணை விளையாட்டரங்கில் ஹெலிக்கொப்டர் மூலம் வந்திறங்கிய ஜனாதிபதி அவர்களை, பெருந்திரளான மக்கள் கரகோஷமெழுப்பி வரவேற்றனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொன் னாடைபோர்த்தி ஜனாதிபதியை வரவேற்றார். பாடசாலை சிறுவர் சிறு மியர் மலர்மாலையணிவிக்க ஜனாதிபதி அழைத்துவரப்பட்டார்.

யாழ். மாநகரசபை மேயர் யோகேஸ்வரி பற்குணராசா, அமைச்சர்களான எஸ். எம். சந்திரசேன, பவித்திரா வன்னியாராச்சி, திஸ்ஸ கரலியத்த, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன், ஜனாதிபதியின் ஆலோசகர் வடிவேல் சுரேஷ் உள்ளிட்ட பலர் இந்த மக்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment