Monday, July 18, 2011பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் கைதிகள் தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு சட்ட மா அதிபர் திணைக்களத்திடம், சிறைச்சாலைகள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ் கைதிகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு, சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் தற்போது தமிழ் கைதிகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் குறித்து சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அல்லது விடுதலை செய்யப்பட வேண்டுமென கோரி கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும், கைதிகளின் இந்தக் கோரிக்கைகளுக்கு சிறைச்சாலை திணைக்களத்தினால் பதிலளிக்க முடியாது எனவும், சட்ட மா அதிபர் திணைக்களமே இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment