Monday, July 18, 2011

கிழக்கில் ஆயுதக்குழுக்கள், ஆயுதங்களை கையளிக்கவேண்டும்!

Monday, July 18, 2011
கிழக்கு மாகாணத்தில் இயங்கும் ஆயுதக்குழுக்கள் தமது ஆயுதங்களை கையளிக்கவேண்டும் என்று படையினர் மீண்டும் வேண்டுகோள் விடுக்கவுள்ளனர்

இது தொடர்பான அறிவித்தல் இன்று முதல் கிழக்கு மாகாணத்தின்; கிராம மட்டங்களில் ஒலிபெருக்கிகள் மூலம் விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் கொள்ளை சம்பவங்களை அடுத்தே இந்த அறிவித்தல் விடுக்கப்படவுள்ளது

படையினரால் கடந்த வாரங்களில் சட்டவிரோத ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்து ஆயுதங்களை பற்றி தகவல் தெரிந்தோர், அது தொடர்பான தகவல்களை தமக்கு அறிவிக்குமாறும் படையினர் கேட்டுள்ளனர்

No comments:

Post a Comment