Thursday, July 14, 2011

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பிரிஸ் பாகிஸ்தான் விஜயம்!

Thursday, July 14, 2011
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று பாகிஸ்தானுக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அமைச்சர் பாகிஸ்தான் செல்வதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஜனாதிபதி அசீப் அல் சர்தாரி உள்ளிட்ட நாட்டின் முக்கிய இராஜதந்திரிகளுடன் அமைச்சர் பீரிஸ் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பாகிஸ்தான் ஜனாதிபதி கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததாகவும் அதன் தொடர்ச்சியாக இந்த விஜியம் அமைவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

பாகிஸ்தான் இலங்கைக்கு 300 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதயிhன பொருட்களை ஏற்றுமதி செய்யும் அதேவேளை, இலங்கையிலிருந்து 50 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment