Thursday, July 14, 2011

கருவெலகஸ்வெவ பொலிஸ் அதிகாரி ஒருவர் பண மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது!

Thursday, July 14, 2011
கருவெலகஸ்வெவ பொலிஸ் அதிகாரி ஒருவர் பண மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றொரு பொலிஸ் அதிகாரியிடமிருந்து அவரது வங்கிப் புத்தகத்தை திருடி அவ் வங்கிப் புத்தகக் கணக்கில் இருந்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி பணம் மீளப்பெற முயற்சி செய்துள்ளார்.

குறித்த நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் நோக்குடன் வங்கி முகாமையாளர் ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் காட்டுமாறு கேட்டுள்ளார். உடனேயே குறித்த பொலிஸ் அதிகாரி எதுவித பதிலும் தெரிவிக்காது வங்கியில் இருந்து வெளியேறியுள்ளார்.

சந்தேகம் கொண்ட முகாமையாளர் வங்கியின் பாதுகாப்பு கமராக்களின் உதவியுடன் சோதனை செய்து பார்த்த போது வங்கிப்புத்தகத்தின் உரிமையாளர் வந்த பொலிஸ் அதிகாரி அல்ல என்பது தெரியவந்தது.

இதனையடுத்து வங்கி முகாமையாளர், பொலிஸ் நிலையத்துக்கு வழங்கிய தகவலை அடுத்து குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment