Wednesday, July 20, 2011

வன்முறைக்கு முடிவுகண்டது போன்று அரசியல் உரிமைப் பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் தீர்வு காணப்படும்-டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, July 20, 2011
வன்முறைக்கு முடிவுகண்டது போன்று அரசியல் உரிமைப் பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் தீர்வு காணப்படும்-டக்ளஸ் தேவானந்தா!

சாவகச்சேரியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு தேர்தகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இதுதான் கடைசித் தேர்தல் இறுதிச் சந்தர்ப்பம் என்றும் இத்தேர்தலைத்தான் சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டு இருப்பதாகவும் ஆகையினால் எமக்கு வாக்களியுங்கள் என்றும் கூறி மக்களை உசுப்பேற்றி வாக்குகளை முன்னைய காலங்களில் அபகரித்ததன் பயனாகவே எமது மக்கள் இழப்புக்களையும் அவலங்களையும் சந்தித்தனர்.

இந்த நிலையில் சிங்களக் கட்சிக்கு வாக்களிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்கின்றார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தற்போது கூறி வருகின்ற நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஒரு கூட்டு அரசாங்கம். அக்கூட்டுக் கட்சியில் இனம் மதம் மொழி என்ற வேறுபாடு கிடையாது. இலங்கையின் எல்லா கட்சிகளும் இன மத மொழி பேதமில்லாமல் ஒன்றிணைந்த கூட்டமைப்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விளங்குகின்றது. இதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்கும்படி கேட்டு நின்றமையை கூட்டமைப்பினர் மறந்து விட்டார்கள் போலும்!

கடந்த காலங்களில் பல வாய்ப்புக்கள் கிடைத்த போதிலும் அவற்றை சரியான முறையில் அப்போதைய தமிழ்த் தலைமைகள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இருந்த போதிலும் தற்போது எமது பகுதிகளினதும் மக்களினதும் தேவைகள் தொடர்பில் அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை நான் தொடர்ச்சியாக முன் வைத்ததன் பயனாக இப்பொழுது பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கடந்த காலங்களில் இருந்த வன்முறைக்கு ஜனாதிபதி தலைமையிலான அரசு முடிவு கண்டது போன்று அரசியல் உரிமைப் பிரச்சினைக்கும் இந்த அரசு தீர்வுகாணும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment