Wednesday, July 20, 2011

இலங்கைக்கான பிரித்தானியாவின் புதிய பிரதி உயர்ஸ்தானிகராக ரொப்பி புளொச்சஸ்மெட் கொழும்பில் தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார்!

Wednesday, July 20, 2011
இலங்கைக்கான பிரித்தானியாவின் புதிய பிரதி உயர்ஸ்தானிகராக ரொப்பி புளொச்சஸ்மெட் கொழும்பில் தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார். இவர் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தில் 2004 ஆம் சேர்ந்தார் மற்றும் நிறுவனத்திற்குள் பல்வேறு பகுதிகளில் கடமையாற்றியவராவார்.

புதிய பிரதி உயர்ஸ்தானிகராக பதவியேற்க முன்னர் இவர் மெட்ரிட்டில் உள்ள பிரித்தானிய தூதரகத்தில் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் அரசியல் பிரிவில் பிரதித் தலைவராகவும், நீதி மற்றும் உள்துறையில் முதல் செயலாளராக பணியாற்றினார். துணை பிரதம மந்திரி ஜான் பிரிஸ்காட்டின் 2005-2007 ஆண்டு காலப்பகுதியில் வெளியுறவு ஆலோசகாராவும் இவர் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment