Saturday, July 16, 2011

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக நிருபமா ராவ் பொறுப்பேற்கிறார்!

Saturday, July 16, 2011
அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக நிருபமா ராவை நியமித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வெளியுறவுத் துறைச் செயலராகப் பொறுப்பு வகித்துவந்த நிருபமா ராவ், அடுத்த அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக விரையில் பொறுப்பேற்கவுள்ளார்.

இந்தத் அதிகாரபூர்வமாக தகவலைத் வெளியுறவுத் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். முன்னதாக அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றி வந்த மீரா சங்கரின் பணி ஜூன் மாதத்துடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.

1973-ம் ஆண்டு ஐஎஃப்எஸ் அதிகாரியான நிருபமா ராவ், கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் வெளியுறவுச் செயலராக பொறுப்பேற்றார்.இதனை தொடர்ந்து அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக விரையில் பொறுப்பேற்கவுள்ளார்.

No comments:

Post a Comment