Saturday, July 16, 2011பேராதெனிய – கிரிபத்கும்புர சந்தியில் இரண்டு பேரூந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் மூவர் பலியாகினர்.
இந்த விபத்து இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.
தனியார் பயணிகள் பேரூந்து ஒன்றும் ஆடைத்தொழிற் சாலை பணியாளர்கள் சிலரை ஏற்றிய பேரூந்தும் ஒன்றுமே இவ்வாறு மோதுண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 15 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment