Saturday, July 16, 2011

இங்கிலாந்தில் 29 வயதில் தாத்தா ஆன இளைஞர்!

Saturday, July 16, 2011
இங்கிலாந்தில் வேல்ஸ் பகுதியில் உள்ள பிரிட்ஜென்ட் என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஷெம்டேவிஸ் (29). இவரது மகள் தியா (14). இவள் தன்னுடன் படிக்கும் 15 வயது சிறுவனுடன் பழகினாள். அதன் விளைவாக கர்ப்பம் அடைந்தாள். இதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அதன் மூலம் இங்கிலாந் தில் மிக குறைந்த வயதில் தாத்தா ஆன இளைஞர் என்ற பெருமையை டேவிஸ் பெற்றுள்ளார். இவரும் தனது மகளை போல 14 வயதில் செல்லி என்ற சக மாணவியுடன் காதல் வயப்பட்டார். நெருங்கி பழகியதன் விளைவாக கர்ப்பிணி ஆன செல்லி தியாவை பெற்றெடுத்தாள்.
அப்போது டேவிசுக்கு 15 வயது.

மகள் தியா குழந்தை பெற்றது குறித்து டேவிஸ் கூறியதாவது:-

தியாவே ஒரு குழந்தை தற்போது அவளுக்கு ஒரு குழந்தையா? அதை நினைக்கும்போது எனக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. எனது மகள் கர்ப்பம் அடைந்திருப்பதை அறிந்ததும் முதலில் நான் அதிர்ச்சி அடைந்தேன்.பின்னர் யோசித்தபோது தான் அவளது இதே வயதில் நான் செய்த தவறைதான் அவளும் செய்திருப்பதை உணர்ந்து என்னை சமாதானப்படுத்தி கொண்டேன் என்றார்.

தியாவின் தாய் செல்லி கூறும்போது, எது நடக்கக் கூடாது என நினைத்தேனோ அந்த கெட்ட சம்பவம் நடந்து விட்டது. நான் செய்த அதே தவறை தியாவும் திரும்ப செய்து விட்டாள். இது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது என நான் அவளுக்கு பலமுறை எடுத்துரைத்தேன்.

இருந்தும் நடந்து விட்டது என்றார்.

No comments:

Post a Comment