Saturday, July 16, 2011

ஊழல் மோசடிகளை கட்டுப்படுத்த ஆளும் எதிர்க்கட்சிகள் இணைந்து செயற்பட வேண்டும்-ரணில் விக்ரமசிங்க!

Saturday, July 16, 2011
ஊழல் மோசடிகளை கட்டுப்படுத்துவதற்கு ஆளும், எதிர்க்கட்சிகள் இணைந்து செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்களில் சிறந்த நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு இவ்வாறு ஆளும் எதிர்க்கட்சிகள் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிலியந்தலவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நல்ல யோசனைத் திட்டங்களுக்கு ஆளும் எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். துரதிஷ்டவசமாக இன்று ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல உள்ளுராட்சி மன்றங்களில் பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆளும் கட்சியினர் தேசப்பற்று தொடர்பில் பிரச்சாரம் செய்து வருகின்ற போதிலும் சகல துறைகளிலும் மோசடிகள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தரம் குறைந்த எரிபொருள் இறக்குமதியுடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும், ஏனைய நாடுகளில் இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment