Saturday, July 16, 2011

செனல்4 காணொளி, தாருஸ்மன் அறிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்கமளிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது!

Saturday, July 16, 2011
செனல்4 காணொளி, தாருஸ்மன் அறிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்கமளிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சனல்4 காணொளி மற்றும் தாருஸ்மன் அறிக்கை ஆகியன போலியானவை என்பதனை உலகின் பல முக்கிய நாடுகளுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் விசேட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

வெளிநாடுகளுக்கான இலங்கை தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவராலயங்களின் ஊடாக இவ்வாறு விளக்கமளிக்கப்பட உள்ளது.

காணொளி மற்றும் அறிக்கை போலியானது என்பதனை உறுதிப்படுத்துவதற்கு வெளிநாட்டு ஊடகங்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

No comments:

Post a Comment