Saturday, July 16, 2011மூன்று இலங்கையர்கள் உட்பட நான்கு பேர் காஸ்மீர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சபையர் கடத்தல்கார சர்வதேச கும்பலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஜம்மு மற்றும் காஸ்மீர் உலேதகங்கள் லிமிடெட் நிறுவனத்தின் சில உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டதன் பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள சபையர்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடத்தலுடன் சில உயர் அதிகாரிகள் தொடர்புபட்டிருக்கிறார்கள் என சந்தேகிப்பதாக காஸ்மீர் மூத்த பொலிஸ் அதிகாரி S. M. Sahai தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment