Thursday, July 14, 2011(புலி)கூட்டமைப்பினர் இராணுவத்தினருக்கெதிராக பரப்புரை மேற்கொண்டு அரசியல் பிழைப்பு நடத்த முயற்சி-ஹத்துருசிங்க!
தமக்கு எதிராக வன்முறைகள் இடம்பெறுவதாகப் பரப்புரை செய்து கடந்த மூன்று தசாப்தங்களாக அரசியல் பிழைப்பு நடத்திவந்த (புலி)கூட்டமைப்பு தற்போது இராணுவத்தினருக்கு எதிராக பரப்புரைகளை மேற்கொண்டு அரசியல் பிழைப்பு நடத்த முயற்சிப்பதாக யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க குற்றம்சுமத்தியுள்ளார்
யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது இராணுவத்தினர் திட்டமிட்டு இடையூறு விளைவிக்கின்றனர் என அந்தக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளார்.கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உங்களின் பதில் என்ன? எனக் கேட்டபோதே யாழ். இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தலைமைகள் பிரிவினைவாதம் பற்றிப் பேசியே அரசியல் நடத்திவந்தன. அவர்களால் அக்காலப் பகுதிக்குள் ஒன்றும் செய்து கொள்ள முடியாமல் போனது. இதனை நன்கு உணர்ந்த மக்கள் இன்று அரசுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பீதி (புலி)கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது. இப்பொழுது அவர்களுக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை. எனவே, இராணுவத்தினர் அடாவடியில் ஈடுபடுகின்றனர் எனப் பொய்ப் பிரசாரம் செய்து அனுதாப வாக்குகளைப் பெற முயற்சிக்கின்றனர்.தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளின்போது இராணுவம் இடையூறு விளைவித்தது எனக் கூறப்படுவதாவது அப்பட்டமான பொய். நாம் பாதுகாப்புக் கடமைகளிலேயே ஈடுபடுகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment