Thursday, July 14, 2011

துப்பாக்கி தயாரித்தவர் கைது!

Thursday, July 14, 2011
சொந்தமாக தயாரித்த இரண்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவரை சீகிரிய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் அண்மையில் மற்றுமொருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைபாட்டின் பேரில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

அதன் பிரகாரம் சந்தேக நபரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது இரண்டு துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தம்புள்​ளை நீதிவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நபர் சிகிரியா கிம்பிஸ்ஸ பகுதியைச்சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment