Thursday, July 14, 2011மும்பையில் நடத்தப்பட்ட தொடர் குண்டு தாக்குதல்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின்
செயலாளர் நாயகம் பான் கீ மூன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக ரொய்டர் செய்தி வெளியிட்டுள்ளது. பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகளை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய அரசாங்கம் மற்றும் மக்களுடனான ஒருமைப்பாட்டினையும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் வெளிப்படுத்தியுள்ளார்.
தொடர் குண்டு வெடிப்பினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பான் கீ மூன் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
இதேவேளை தொடர் குண்டு தாக்குதல்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பேரவை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
நியூயோக்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் பாதுகாப்பு பேரவையின் தலைவர் பீற்றர் விட்டிக் வாசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை தளமாக கொண்ட ஆயுததாரிகளால் 2008 ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட குண்டு தாக்குதலை அடுத்து நடத்தப்பட்ட பாரிய குண்டுதாக்குதலாக இது பதிவாகியுள்ளது.
2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 166 பேர் கொள்ளப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிக்கான உறவுகளில் பாரிய விரிசல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment