Monday, July 18, 2011

சேலத்தில் நடந்த விஜய் விழாவில் போலீஸ் தடியடி!

Monday, July 18, 2011
சேலத்தில் நடிகர் விஜய் விழாவில் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். சேலம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று சேலத்தில் நடந்தது. மேடைக்கு நடிகர் விஜய் மாலை 6.20க்கு வந்தார். உடனே, ரசிகர்கள் மேடையை நோக்கி முன்னேறினர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பல ரசிகர்கள் கீழே விழுந்து மிதி பட்டனர். இதனால், ரசிகர்களை போலீசார் எச்சரித்தனர்.

தேசிய கீதம் பாடி விழா முடிந்ததும், விஜய்க்கு ரசிகர்கள் வெள்ளி வாள் வழங்கினர். அப்போது, மேடையை நோக்கி ரசிகர்கள் மீண்டும் முன்னேறினர். இதனால் நெரிசல் ஏற்பட்டது. அவர்களை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். ரசிகர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். பலர் காயமடைந்து ஓட முடியாமல் விழுந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள், போலீசார் மீது சேர்களை தூக்கி வீசி தாக்கினர். சேர்களை அடித்து நொறுக்கினர். 500க்கும் மேற்பட்ட சேர்கள் உடைக்கப்பட்டன.

No comments:

Post a Comment