Monday, July 18, 2011விலை பொறிக்கப்படாத 250 வர்த்தக விளம்பரங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
பல்வேறு பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பாரியளவிலான பதாகைகள், அறிவித்தல்கள் மற்றும் சுவரொட்டிகள் ஆகியனவும் இதில் அடங்குவதாக அதிகார சபையின் தலைவர் ரூமி மர்ஷூக் தெரிவித்துள்ளார்.
விலை பொறிக்கப்படாத விளம்பரங்களை இனங்காண்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நுகவோர் சட்டத்தின் 26 ஆவது சரத்திற்கு அமைய அனைத்து வர்த்தக விளம்பரங்களிலும் குறித்த பொருளின் விற்பனை விலை பொறிக்கப்பட வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கமைய வரத்தக விளம்பரங்களில் விலைகளை காட்சிப்படுத்துவதற்கு அனைத்து வரத்தகர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment