Monday, July 18, 2011

அனுமதிப்பத்திரமற்ற 500,000 ஆயுதங்கள் நாட்டில் பாவனையில் உள்ளது!

Monday, July 18, 2011
நாடு முழுவதிலும் சுமார் 500,000 அனுமதிபத்திரமற்ற ஆயுதங்கள் புழக்கத்தில் இருப்பதாக ஆய்வுத் தகவல்களின் மூலம் தெரிய வந்துள்ளது.

காவல்துறையினரால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அனுமதிப் பத்திரமற்ற ஆயுதங்களை திரட்டும் நோக்கில் பொது மன்னிப்புக் காலமொன்று அறிவிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

பொதுமன்னிப்புக் காலம் நிறைவடைந்ததன் பின்னர் நாடு தழுவிய ரீதியில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு சட்டவிரோத ஆயுதங்கள் மீட்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகளவிலான அனுமதிப்பத்திரமற்ற ஆயுதங்கள் பாதாள உலகக் கோஷ்டியினரிடம் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் சட்டவிரோத ஆயுதங்கள் இவ்வாறு அதிகளவில் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment