Monday, July 18, 2011டோக்கியோ: ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் மேற்கு பகுதியில் சுமார் 350 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஓகி அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓகி அணு மின் நிலையம் மூடப்பட்டுள்ளது.
ஓகி அணு மின் நிலையத்தில் உள்ள முதல் அணு உலையில் போரிக் ஆசிட் கலனில் அழுத்தம் குறைந்ததை தொடர்ந்து இந்த அணு மின் நிலையம் மூடப்பட்டுள்ளது. கன்சாய் எலக்ட்ரிக் பவர் நிறுவனம் நடத்தி வந்த இந்த அணு மின் நிலையம் 1.18 மெட்ரிக் கிலோ வாட் மின் உற்பத்தி திறன் கொண்டது. மேலும் ஓகி அணு மின் நிலையத்தில் கதிர்வீச்சு ஏதும் பரவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment