Monday, July 18, 201113வது அரசியல் அமைப்புத் திருத்தத்தை அமுல்படுத்துவதே இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதிகாரப் பகிர்வு ஊடாக இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தை செய்ற்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி விரைவில் கவனம் செலுத்துவார் என தான் நம்புவதாக அமைச்சர் ஏ.எச்.எம்.ஃபௌஸி நியூஸ் பெஸ்டுக்கு தெரிவித்தார்.
இது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குழுவொன்றை அமைத்துள்ளதாகவும் அக் குழுவினூடாக துரித நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் வாழும் அனைத்து மக்களும் பிரச்சினை இன்றி வாழ்வதற்கு இந்த முயற்சிகள் வழிவகுக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் 13வது திருத்தத்தை செயற்படுத்துவதன் மூலம் இலங்கையின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்ற நிலைப்பாட்டிலேயே தான் நீண்டகாலம் இருப்பதாக அமைச்சர் பீ.தயாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த திருத்தத்திற்கு அமைவாக வழங்கப்படும் அதிகாரப் பகிர்வு இலங்கையில் வாழும் அனைவரையும் திருப்தியடைய செய்யும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றின் மூலம் ஆராய்வது சிறந்த பலனை தரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் 13 வது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு அப்பால் செல்லும் தீர்வொன்றின் தேவை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பியசேன கமகே நியூஸ் பெஸ்டுக்கு தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த தமிழ் மக்களின் இணக்கப்பாட்டுடன் இத் தீர்வு காணப்பட வேண்டும் என அவர் கூறினார்.
13வது அரசியல் தீ்ர்வு அமைப்பு திருத்தத்திற்கு அப்பால் செல்லும் தீர்வொன்றுக்கு யோசனை இதுவரை முன்வைக்கப்படவில்லை எனவும் அது குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பியசேன கமகே மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment