Monday, July 18, 2011யாழ். மாவட்டத்தில் வாழும் வறிய குடும்பங்களுக்கு வீடு அமைத்து கொடுக்க படையினர் நடவடிக்கை!
யாழ். மாவட்டத்தில் வாழும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களைத் தலைமையாகக் கொண்ட நூறு குடும்பங்களுக்கு யாழ். மாவட்டத்தில் நிலையான வீடுகள் அமைத்துக்கொடுக்கும் நடவடிக்கை படையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பத்து நாட்களில் நூறு வீடுகள் என்ற திட்டத்தின் கீழ் படையினர் இந்த வீட்டுத் திட்டத்தை நடை முறைப்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். வறுமையான குடும்பங்களைத் தெரிந்து மனிதாபிமான அடிப்படையில் இராணுவத்தினர் இந்த வீட்டுத் திட்டத்தை நடை முறைப்படுத்துகின்றனர்.
சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான இந்த வீட்டுத்தி;ட்டத்தில் இராணுவத்தினர் குறிப்பாக பெண் இராணுவத்தினரும் அதிகாலை முதல் மாலை வரை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment