Monday, July 18, 2011சில சக்திகள் இலங்கைத் தமிழர்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதாக ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 15ம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய பேரவை அமர்களில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வாழ் தமிழர்களுக்கு நெருக்கடி நிலைமையை ஏற்படுத்தும் நோக்கில் தமிழகத்தைச் சேர்ந்த சில சக்திகள் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக குரல் கொடுக்கும் தமிழக அரசியல்வாதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்வதன் மூலம் தமிழ் மக்கள் இலங்கைளில் அனுபவிக்கும் சுதந்திரம் பற்றி நேரடியாக அவதானிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மற்றும் ஏனைய முக்கிய நகரங்களில் பாரியளவில் தேர்த் திருவிழாக்கள் நடைபெறுவதாகவும், கம்பன் மற்றும் வள்ளுவனுக்கு பெரும் விழாக்கள் எடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுகதைகள், நாவல்கள் மற்றும் ஏனைய இலக்கிய படைப்புக்கள் மாதந்தோறும் நூற்றுக் கணக்கில் இலங்கையில் பிரசூரமாவதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் கலைப்படைப்புக்கள் தமிழகத்திலும் பிரசூரம் செய்யப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment