Wednesday, July 20, 2011இலங்கையில் கணனி குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்கு விசேட பிரிவொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.குற்ற விசாரணைப் பிரிவினால் இந்த தனியான அலகு உருவாக்கப்பட்டுள்ளது.
குற்றச் செயல்கள் தொடர்பில் ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
அவதூறு ஏற்படுத்தக் கூடிய செய்தி இணைய தளங்கள், பேஸ் குற்றச் செயல்கள், கணனி செட் குற்றச் செயல்கள் உள்ளிட்ட பல்வேறு கணனி சார் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
வங்கி மோசடி, கப்பம் கோரல் போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் பிரதிவிளைவாக இவ்வாறான குற்றச் செயல்கள் இடம்பெறுவதாகவும் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment