Wednesday, July 20, 2011

புதிதாக நியமனம் பெற்ற ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி சுப்நாய் நான்டி வடபகுதிக்கு பயணம் செய்துள்ளார்!

Wednesday, July 20, 2011
புதிதாக நியமனம் பெற்ற ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி சுப்நாய் நான்டி வடபகுதிக்கு பயணம் செய்துள்ளார்.அவர் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் புதிய இணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் வவுனியாவுக்கு சென்று மெனிக்பாம் அகதிகள் முகாமை பார்வையிட்ட பின்னர் மீள்குடியேற்றம் தொடர்பிலும் ஆராய்ந்தார்.

இதன்போது கருத்துரைத்த அவர் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை அறிவதும் அவர்களின் வாழ்வாதார நிலைமைகளை பார்வையிடுவதுமே தமது பயணத்தின் நோக்கம் என்று குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கம் வடக்கில் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment