Wednesday, July 20, 2011

கிளிநொச்சி இரணைமடுப் பகுதியில் புதிய விமான ஓடுபாதை திறந்து வைப்பு!

Wednesday, July 20, 2011
இலங்கை விமானப் படை கிளிநொச்சியில் விமான ஓடு பாதை ஒன்றை நேற்றுக் காலை புதிதாக திறந்து வைத்தது. இந்த விமான ஓடு பாதையை உத்தி யோகபூர்வமாக திறந்து வைக்கும் பொருட்டு விமானப் படைக்குச் சொந்தமான y12 ரக அன்ரனோவ் விமானம் நேற்றுக்காலை 11.30 மணியளவில் முதல் முறையாகத் தரையிறக்கப்பட்டது.

விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரமவின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் விமானப் படை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். புலிகளின் பலம் பொருந்திய தளமாகக் கருதப்பட்ட கிளிநொச்சியை ஊடறுத்துச் செல்லும் ஏ-9 பிரதான வீதியிலிருந்து சுமார் 7 கிலோ மீற்றர் கிழக்கே இந்த விமான ஓடு பாதை அமைக்கப்பட்டுள்ளதாக விமானப் படைத் தலைமையகம் தெரிவித்தது. இந்த ஓடு பாதையின் நீளம் ஒரு கிலோ மீற்றராகும்.

விமானப் படையின் கிளிநொச்சி தலைமையகத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தொலைவில் இந்த ஓடு பாதை அமைக்கப் பெற்றுள்ளதால் கிளிநொச்சி விமான ஓடுபாதை� என அழைக்கப்படும் என்று விமானப் படைப் பேச்சாளர் குறூப் கெப்டன் அன்ரூ விஜேசூரிய தெரிவித்தார்.

வடக்கில் வவுனியா தொடக்கம் காங்கேசன்துறை வரையான பிரதேசம் வரை எந்த ஒரு விமான ஓடுபதைகளும் இல்லை என்று தெரிவித்த அவர் கிளிநொச்சி ஓடு பாதை வட பகுதி மக்களுக்கு மிகவும் பிரயோசனமாக அமையும் என்று குறிப்பிட்டார். எதிர்காலத்தில் வர்த்தக விமான சேவைகளையும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

மேற்ப்படி விமான ஓடுபாதையானது புலிகளால் முன்னர் பாவிக்கப்பட்ட ஓடுபாதையென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment