Friday, July 15, 2011திருகோணமலை நிலாவெளி கடலில் குளிக்கச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
கல்விச் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு திருகோணமலைக்கு சென்ற நுவரெலியா ஹரஸ்பத்த சிங்கள மகா வித்தியாலய மாணவர்களில் மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
நுவரெலியா ஹரஸ்பத்த சிங்கள மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 123 மாணவர்களும் 12 ஆசிரியர்களும் இந்த சுற்றுலாவில் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று முற்பகல் 11.30 அளவில் இந்த துர்ப்பாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக திருகோணமலைப் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறினார்.
கடலில் குளிக்கச் சென்ற நான்கு மாணவர்கள் அலையில் அள்ளுண்டு சென்றதாகவும் அவர்களில் ஒருவர் காப்பாற்றப்பட்டதாகவும் பொலிஸ் உயர்ப் பாதுகாப்பு பிரிவின் உத்தியோகத்தர் ஒருவர் கூறினார்.
எனினும் ஏனைய மூன்று மாணவர்களும் அலையில் அடித்து செல்லப்பட்டதாக ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
16 மற்றும் 17 வயதான மூன்று மாணவர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
இவர்களது சடலங்ககள் நிலவெளி கிராமிய வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளதோடு உயிருடன் மீட்கப்பட்ட மாணவன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.
No comments:
Post a Comment