Friday, July 15, 2011

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி17 ராக்கெட்!.

Friday, July 15, 2011
ஸ்ரீஹரிகோட்டா : பி.எஸ்.எல்.வி- சி16 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து சென்றது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. ஜிசாட்-12 என்ற அதிநவீன தகவல் தொடர்பு செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி-சி17 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது.

டெலிபோன் சேவை, வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும் மருத்துவ சிகிச்சை, கல்வி ஆகிய வசதிகளை மேம்படுத்துவதற்காக ஜிசாட்-12 என்ற அதிநவீன செயற்கை கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கினர். 1410 கிலோ எடையுள்ள இந்த செயற்கை கோளில் 12சி பாண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் உள்ளன. இந்த செயற்கை கோள் பி.எஸ்.எல்.வி-சி17 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 4.48-க்கு விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான கவுன்ட்டவுன் நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்த முறை செயற்கை கோளை ஏவ பி.எஸ்.எல்.வி-எக்ஸ்.எல் ரக ராக்கெட்டை இஸ்ரோ பயன்படுத்துகிறது. இது சாதாரண பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் மோட்டரைவிட அதிக சக்தி வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு அனுப்பப்டும் 2&வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் இது. கடந்த ஏப்ரல் மாதம் அனுப்பப்பட்ட பி.எஸ்.எல்.வி- சி16 ராக்கெட்டில் ரிசோர்ஸ்சாட்-2 என்ற செயற்கை கோளும், மற்ற இரு சிறிய செயற்கைகோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.

இன்று அனுப்பப்படும் ராக்கெட் குறித்து இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: வழக்கமாக அனுப்பப்படும் பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் 9 டன் திட எரிபொருள் பயன்படுத்தப்படும். ஆனால் பி.எஸ்.எல்.வி&எக்ஸ்.எல். ரக ராக்கெட்டில் 12 டன் திட எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. 2008-ம் ஆண்டு சந்திரயான்-1 செயற்கைகோள் அனுப்பியபோது எக்ஸ்.எல். ராக்கெட் பயன்படுத்தப்பட்டது. 2&வது முறையாக தற்போது பயன்படுத்தப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.90 கோடி. அதில் அனுப்பப்படும் ஜிசாட்-12 செயற்கை கோளின் மதிப்பு ரூ.80 கோடி. இரண்டுக்கும் இன்சூரன்ஸ் செய்யப்படவில்லை. இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

No comments:

Post a Comment