Friday, July 15, 2011

பங்களாதேஷ் இராணுவ பிரதான நிறைவேற்று அதிகாரி நாளை இலங்கை விஜயம்!

Friday, July 15, 2011
பங்களாதேஷ் இராணுவத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் அபு பிலால் நாளை இரவு இலங்கை செல்ல உள்ளார். அவர் நான்கு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை செல்ல உள்ளார் என இலங்கை இராணுவத்தின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் இராணுவ அதிகாரி, இலங்கை இராணுவத்தளபதி லெப்டினட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் இரண்டு நாடுகளுக்கு இடையிலான இராணுவ உறவுகளை விரிவுப்படுத்த, இந்த அதிகாரியின் விஜயம் உதவும் எனவும் மெதவல குறிப்பிட்டுள்ளார்.

அபு பிலால் நாளை இரவு 8.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment