Friday, July 15, 2011அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக குற்றவாளியாக காணப்பட்ட முன்னாள் இராணுவ வீரர் ஒருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கைதிகளை கலகத்தில் ஈடுபடுத்தியமை, சிறைச்சாலை அதிகாரிகளின் உத்தரவுக்கு கட்டுப்படாமை, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குறித்த இராணுவ வீரர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார்.
இந்த ஒவ்வொரு குற்றச்சாட்டுக்காகவும் தலா ஆறு மாதம் வீதம் 24 மாதங்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து அனுராதபுர மாவட்ட நீதிபதியும், மேலதிக நீதவானுமாகிய லக்மாலி ஹேவாவசம் தீர்ப்பளித்துள்ளார்.
அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் பாரிய குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராணுவ அதிரடிப் படை வீரர் ஒருவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 23 ஆம், 24 ஆம் திகதிகளில் அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன், மேலும் எட்டு பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment