Monday, December 30, 2013

பொலிஸாருக்கு எதிராக பொதுமக்கள் முறைப்பாடுகளை செய்வதற்கு ஏதுவாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு புதிய தொலைபேசி இலக்கம்!

Monday, December 30, 2013
இலங்கை::பொலிஸாருக்கு எதிராக பொதுமக்கள் முறைப்பாடுகளை செய்வதற்கு ஏதுவாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு புதிய தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
இதற்கமைய 0710 36 10 10 என்ற இலக்கத்திற்கு பொது மக்கள் தமது முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என ஆணைக்குழுவின் செயலாளர் டி.எம்.கே.பி.தென்னகோன் தெரிவித்துள்ளார்.
 
பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் எவரேனும் பாதிக்கப்பட்டால் குறித்த இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி முறையிடலாம் என தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த வருடத்தில் இதுவரை பொலிஸாருக்கு எதிராக சுமார் 400 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.


மீனவர்கள் மீண்டும் சிறைபிடிப்பு: இலங்கைக்கு ஜி.கே.வாசன் கண்டனம்!

Monday, December 30, 2013
புதுச்சேரி::மத்திய மந்திரி ஜி.கே.வாசன் தஞ்சாவூருக்கு சென்று விட்டு சென்னை திரும்பும் வழியில் இரவு புதுவையில் தங்கினார். இன்று காலை ஜி.கே.வாசன் மத்திய மந்திரி நாராயணசாமியை அவரது வீட்டில் சந்தித்தார். சுமார் 30 நிமிடம் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.
பின்னர் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீண்டும் சிறை பிடித்துள்ளதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். தமிழக மற்றும் புதுவை மீனவர்கள் பிரச்சினையை தீர்ப்பதற்காக மத்திய மந்திரி நாராயணசாமி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். வருகிற ஜனவரி மாதம் மத்திய அரசு டெல்லியில் இருநாட்டு மீனவ பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு மத்திய அரசுக்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் நிலவி வருகிறதே?
பதில்: அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறோம். இதனால் கட்சிக்குள் சில பிரச்சினைகள் வரத்தான் செய்யும். இதனை கட்சி தலைமை பார்த்து கொள்ளும்.

கேள்வி: வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இடம் பெறுமா?

பதில்: கடந்த 2004 மற்றும் 2009–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் வெற்றி கூட்டணி அமைக்கப்பட்டது. இந்த கூட்டணி அதிக இடங்களை பிடித்து ஆட்சியையும் அமைத்தது. அதேபோல் வருகிற 2014–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் வெற்றி கூட்டணி அமையும். இந்த கூட்டணி தமிழகம்–புதுவை மட்டுமின்றி நாடுமுழுவதும் அதிக இடங்களை கைப்பற்றும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.
 

tamil matrimony_INNER_468x60.gif

கடவுள்களை அவமதித்ததாக டி.ஜி.பி. அலுவலகத்தில் டைரக்டர் சீமான் மீது இந்து அமைப்பினர் புகார்!

Monday, December 30, 2013
சென்னை::சினிமா டைரக்டரும், நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் பேசிய பேச்சுக்கள் அடங்கிய தொகுப்பு 'யூ' டியூப்பில் வெளியாகி இருக்கிறது.
 
அதில் இந்து கடவுள்களான சிவன், விநாயகர் ஆகியோரை பற்றி அவதூறாக சீமான் பேசி இருப்பதாக கூறி இந்து அமைப்பினர் இன்று டி.ஜி.பி. அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:–
சீமான் பேச்சில் இந்துக்கள் கல்லை கடவுளாக வழிபட்டு பின்னர் அந்த கல்தான் நம்மை படைத்ததாக கூறுகின்றனர். இந்து கடவுள் எதைத்தான் படைத்தார்.

அவருக்கு படைக்கப்படுகின்ற கொழுக்கட்டையையாவது படைத்தாரா என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இது இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது. எனவே இந்திய தண்டனை சட்டம் 153ஏ, 295ஏ மற்றும் 298 ஆகிய பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையர்கள் புகலிடம் கோர வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது: அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திசர சமரசிங்க!

Monday, December 30, 2013
இலங்கை::இலங்கையர்கள் புகலிடம் கோர வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது என அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திசர சமரசிங்க தெரிவித்துள்ளார். நாடு நல்லிணக்கத்தை நோக்கி நகர்ந்து செல்வதாகவும் இதனால் இலங்கையர்கள் வேறும் நாடுகளில் புகலிடம் கோர வேண்டிய அவசியம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சிவில் யுத்தம் முற்று முழுதாக நிறைவடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாகவும் சில தரப்பினர் பேலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புகலிடக் கோரிக்கையாளராகவோ அல்லது அகதிகயாகவோ அவுஸ்திரேலியாவிற்குள் இலங்கையர்கள் பிரவேசிக்க வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நோக்கங்களின் அடிப்படையில் இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வருவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் சிறந்த உறவுகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக கல்வி தொடர்பிலான உறவுகள் சிறந்த முறையில் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 

நுவரெலியாவில் 'அரலிய கிறீன் ஹில்ஸ் ' ஹோட்டல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் ஷிராந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ தலைமையில் திறந்து வைப்பு!.

Monday, December 30, 2013
இலங்கை::உள்நாட்டு வெளிநாட்டு உல்லாச பயணிகளின் நலன் கருதி நுவரெலியாவில் 'அரலிய கிறீன் ஹில்ஸ் ' என்ற பெயரில் நட்சத்திர ஹோட்டல் ஒன்று கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த ஹோட்டலை சம்பிரதாயபூர்வமாக  திறந்து வைத்தார்.
 
அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ மற்றும் ஹோட்டல் அதிபர் டட்லி சிறிசேன ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்...
 
அம்பாந்தோட்டை பெண்கள் அபிவிருத்தி மகா சங்கத்தின் 24ஆவது ஆண்டு கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் ஷிராந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ தலைமையில் சிங்கப்பூர் மக்கள் நலன்புரி மத்திய நிலையத்தில் நேற்று (29) நடைபெற்றது.
 
பாராளுமன்ற உறுப்பினர்களான கமலா ரணதுங்க- அம்பாந்தோட்டை மேயர் எராஜ் ரசிந்து- பேராசிரியர் காலோ பொன்சேக்கா- அம்பாந்தோட்டை பெண்கள் அபிவிருத்தி மகா சங்கத்தின் தலைவி கே. இந்திராணி உட்பட சங்கப் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

மஹிந்த ராஜ­ப­க்ச­வுக்கு சந்திரிகா எந்­த­வ­கை­யிலும் சவா­லா­னவர் அல்ல: கெஹலிய ரம்புக்வெல!

Monday, December 30, 2013
இலங்கை::முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்சவுக்கு எந்­த­வ­கை­யிலும் சவாலானவர் அல்ல என்று ஊட­கத்­துறை அமைச்சர் கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார். எமது நாட்டு மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜ­ப­க்சவு­ட­னேயே உள்­ளனர். அவரின் வேலைத்­திட்­டங்­களை எதிர்­பார்த்­துள்­ளனர். மக்­களை பொறுத்­த­வரை கதா­பாத்­தி­ரங்கள் என்­பது முக்­கி­ய­மல்ல. மாறாக யார் என்ன கொள்­கையில் உள்­ளனர் என்­பதே முக்கியமாகும்.
 
அந்த கோணத்தில் நோக்­கு­கையில், ஜனா­தி­பதி மஹிந்­தவின் கொள்­கை­களை மக்கள் முழு­மை­யாக ஏற்­றுள்­ளனர் என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார். எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­கவை பொது வேட்­பா­ள­ராக நிறுத்­து­வது தொடர்பில் அர­சியல் கட்­சிகள் மட்­டத்தில் ஆரா­யப்­பட்­ட­தாக வெளி­வரும் தகவல்கள் குறித்து கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.
 
அமைச்சர் கெஹெ­லிய ரம்­புக்­வெல இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில், முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­கவை ஜனா­தி­பதி தேர்­தலில் பொது வேட்­பா­ள­ராக நிறுத்­து­வ­தற்கு முயற்­சிக்­கப்­ப­டு­வ­தாக தகவல்கள் வந்­துள்­ளன. ஆனால், அவை குறித்து மேல­தி­க­மாக எந்த விட­யமும் தெரி­ய­வில்லை. ஆனால் சந்­தி­ரிகா பண்டா­ர­நா­யக்க குமா­ர­துங்க, ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ச­வுக்கு எந்­த­வ­கை­யிலும் சவா­லா­னவர் அல்ல. இதனை உறுதியாக கூற முடியும்.
 
மக்­களை பொறுத்­த­வரை கதா­பாத்­தி­ரங்கள் என்­பது முக்­கி­ய­மல்ல. மாறாக முன்­வைக்­கப்­ப­டு­கின்ற வேலைத்­திட்­டங்­களும் கொள்­கை­க­ளுமே முக்­கி­ய­மா­ன­வை­யாகும். அந்­த­வ­கையில் பார்க்­கும் ­போது ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்சவின் வேலைத்திட்­டங்­க­ளையும், கொள்­கை­க­ளையும் நாட்டு மக்கள் ஏற்­றுக்­கொள்­கின்­றனர். அவரின் வேலைத்­திட்­டங்­களை மக்கள் எதிர்­பார்த்­துள்­ளனர். அவற்­றுக்­காக காத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர். அந்­த­வ­கையில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவை மக்கள் முழு­மை­யாக விரும்புகின்றனர் என்றார்.