Friday, August 30, 2013

30 வரு­ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யமாட்டோம் : நவிப்பிள்ளையிடம்: வெளி­வி­வ­கார அமைச்சர் ஜி.எல்பீரிஸ் உறுதி!

Friday, August 30, 2013
இலங்கை::கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை முழு­மை­யாக அமுல்­ப­டுத்த வலி­யு­றுத்­தி­யுள்ள ஐக்­கிய நாடு­களின் சபையின் மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை மனித உரிமை மீறல் விட­யங்­க­ளுக்­கெ­தி­ராக அரசு மேற்­கொண்­டுள்ள சட்ட நட­வ­டிக்கை தொடர்பில் வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரி­ஸிடம் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.
 
ஆறுநாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்­றினை மேற்­கொண்டு இலங்கை வந்­துள்ள ஐக்­கிய நாடு­கள் சபையின் மனித உரி­மைகள் பேர­வையின் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளைக்கும் வெளி­வி­வ­கார அமைச்சர் ஜி.எல்.பீரி­ஸுக்­கு­மி­டை­யி­லான விஷேட சந்­திப்­பொன்று நேற்று வெளி­வி­வகார அ­மைச்சில் இடம்­பெற்­றது. இதன்­போதே நவ­நீ­தம்­பிள்ளை நல்­லி­ணக்க ஆணைக்­குழு பரிந்­து­ரை­களை அமுல் செய்­வது மற்றும் மனித உரி­மைகள் விட­யங்­க­ளுக்கு எதி­ரான சட்ட நட­வ­டிக்­கைகள் குறித்து அமைச்­ச­ரிடம் கேள்வி எழுப்­பினார்.
சம­யங்­க­ளுக்­கி­டை­யி­லான குரோத மனப்­பாங்கை வளர்க்கும் செயற்­பா­டுகள்இ கிராண்ட்பாஸ் பள்­ளி­வாசல் விவ­காரம்இ சட்டம் ஒழுங்கு தொடர்­பான புதிய அமைச்சின் உதயம் பயங்­க­ர­வாத தடுப்பு சட்டம் தொடர்­பிலும் இதன்­போது நவ­நீ­தம்­பிள்ளை வெளி­வி­வ­கார அமைச்சர் ஜி.எல்.பீரி­ஸிடம் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.
 
குறித்த விட­யங்­க­ளுக்கு பதி­ல­ளித்­துள்ள அமைச்சர் பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரிஸ் சர்­வ­தேச நாடுகள் சில இலங்­கைக்கு எதி­ராக கொண்­டுள்ள நிலைப்­பா­டு­களை விமர்­சித்­த­துடன் மனித உரிமை மீறல் விட­யங்கள் தொடர்பில் முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்­களை மறுத்தார். அத்­துடன் நீதித்­துறை தொடர்பில் எழுப்­பப்­பட்டு வரும் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்த அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆதா­ரங்­களின் அடிப்­ப­டையில் எந்­த­வித தகுதி தரா­த­ரங்­களும் பாராது நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தாக சுட்­டிக்­காட்­டினார்.
 
திரு­கோ­ண­ம­லையில் ஐந்து மாண­வர்கள் கொல்­லப்­பட்­டமை, அரச சார்­பற்ற நிறு­வன ஊழி­யர்­களின் படு­கொலை தொடர்­பி­லான விசா­ர­ணை­களை சுட்­டிக்­காட்­டிய அமைச்சர் சாட்­சி­களின் அடிப்­ப­டையில் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக தெரி­வித்தார்.
 
பயங்­க­ர­வாத தடைச் சட்டம் தொடர்­பாக தொடுக்­கப்­பட்ட வினா­வுக்கு பதி­ல­ளித்த அமைச்சர் 30 வரு­டங்­க­ளாக அமு­லி­லுள்ள குறித்த சட்­ட­மா­னது திருத்­தப்­பட்ட நிலையில் பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்­கா­கவே பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­கவும் அதனை அரசு ஒரு­போதும் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­போ­வ­தில்­லை­யென்றும் உறு­தி­ய­ளித்தார்.
 
கம்­பஹா, வெலி­வே­ரிய பகு­தியில் பொது மக்கள் ஆர்ப்­பாட்­டம்­மீது இரா­ணுவம் மேற்­கொண்­ட­தாக கூறப்­படும் துப்­பாக்கிப் பிர­யோகம் தொடர்பில் இதன்­போது விரி­வாக ஆரா­யப்­பட்­டது. குறித்த சம்­பவம் தொடர்பில் பல் ேவறு கோணங்­களில் விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தாக மனித உரி­மைகள் ஆணை­யா­ள­ரிடம் சுட்­டிக்­காட்­டிய அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அது தொடர்பில் காலம் தாழ்த்­தாது சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என தெரி­வித்தார்.
 
அத்­துடன்இ கிராண்ட்பாஸ் பள்­ளி­வாசல் விவ­கா­ரப் தொடர்­பிலும் விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரும் நிலையில் குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­டு­வார்கள் எனவும் அவர் உறு­தி­ய­ளித்தார்.
 
இதே­வேளை பொலிஸ் திணைக்­களம் சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டமை தொடர்பில் நவ­நீ­தம்­பிள்ளை அமைச்சர் ஜி.எல்.பீரி­ஸிடம் கேள்வி எழுப்­பினார். இதற்கு பதி­ல­ளித்த அமைச்சர் 2002 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டுவரை பொலிஸ் திணைக்­களம் உள்­துறை அமைச்சின் கீழ் செயற்­பட்­டதை சுட்­டிக்­காட்­டி­ய­துடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாகவே அது தற்போது சட்டம் ஒழுங்கு என்ற புதிய அமைச்சின் கீழ் கொண்டுவந்ததாக சுட்டிக்காட்டினார்.
 
எனினும் பொலிஸ் திணைக்களத்தை நீதியமைச்சின் கீழ் வைத்திருக்கலாம் என ஆலோசனை தெரிவித்த நவநீதம் பிள்ளை சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் அதனை கொண்டுவந்ததற்கு தனது அதிருப்தியை தெரிவித்தார்.

புலிகள் தனது தாய் மற்றும் தந்தையை பட்டபகலில் படுகொலை செய்த போது இலங்கை மீது போர் குற்றம் சுமத்தும் தரப்பினர் அமைதியான இருந்தனர்: நவநீதம்;பிள்ளைக்கும் அருண் தம்பிமுத்துவிற்கும் இடையில் காரசார விவாதம்!

Friday, August 30, 2013
இலங்கை::புலிகள் தனது தாய் மற்றும் தந்தையை  பட்டபகலில் படுகொலை செய்த போது இலங்கை மீது போர் குற்றம் சுமத்தும் தரப்பினர் அமைதியான இருந்தனர் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்;பிள்ளையி
டம் தெரிவித்துள்ளார்.
 
இருவருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு காராசாரமாக இருந்தாக தெரிவிக்கப்படுகிறது.  மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சாம் தம்பிமுத்து மற்றும் அவரது மனைவி ஆகியோர் புலிகளினால் கொலை செய்யப்பட்டனர்.
 
அன்று தமது பெற்றோரை கொலை செய்த புலிகள் சிறுவனாக இருந்த தன்னையும் கடத்திச் சென்றதாக அருண் தம்பிமுத்து, மனித உரிமை ஆணையாளரிடம் கூறியுள்ளார். இன்று மனித உரிமைகள் குறித்து குரல் எழுப்பும் நபர்கள் தன்னை மீட்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அதேவேளை வன்னியில் போரின் இறுதிவாரத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும் என தெரிவித்துள்ள அவர், அப்படியொன்றால் கொழும்பில் நடைபெற்ற குற்றங்களுக்கு யார் பொறுப்பு கூறுவது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 

நவநீதம்பிள்ளை நந்திக்கடலில் புலிகளால் 2 இலட்சம் பொதுமக்கள் பணயம் வைக்கப்பட்டபோது வந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்: கெஹெலிய ரம்புக்வெல்ல!

Friday, August 30, 2013
இலங்கை::இலங்கை தொடர்பான உண்மையான தகவல்களை தெளிவாக பெற்றுக்கொள்வதற்காக இராஜதந்திரிகளுக்கான உபசரணை வரையறைகளுக்கு அப்பால் சென்று நவநீதம்பிள்ளைக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

சர்வதேச சமூகத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையில் உச்ச அளவில் செயற்பட அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று கூறிய அமைச்சர், நந்திக்கடலில் 2 இலட்சம் பொதுமக்களை புலிகள் பணயக் கைதிகளாக தடுத்து வைத்திருந்த போது நவநீதம்பிள்ளை இங்கு வருகை தந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றது. ஐ.நா. மனித உரிமை பேரவை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளையின் வருகை குறித்தும், நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சென்று அவர் பொதுமக்களையும் அமைப்புகளையும் சந்திப்பது குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அமைச்சர், எமது அழைப்பின் பேரிலே நவநீதம்பிள்ளை இங்கு வந்துள்ளார். அவரின் வருகையை நாம் எதிர்க்கவில்லை. ஐ.ம.சு.மு.வில் உள்ள சில கூட்டுக்கட்சிகள் வேறுபட்ட கருத்துகளை முன்வைத்து வந்தாலும் அரசாங்கம் அவருக்குத் தேவையான சகல வசதிகளையும் அளித்து வருகிறது.

வழமையான இராஜதந்திரி வரையறைகளுக்கு அப்பால் அவருக்கு எங்கும் செல்லவும் எவரையும் விரும்பியவாறு சந்திக்கவும் பூரண அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எந்தவித உத்தரவுகளோ வழிகாட்டலோ நாம் வழங்கவில்லை. அவர் தொடர்பில் வேறு விதமான நடைமுறையே பின்பற்றப்பட்டுள்ளது. ஐ.நா.வில் முக்கிய பதவி வகிப்பவர் சர்வதேச சமூகத்துடனான கொடுக்கல் வாங்கலின் போது இலங்கை விசேடமான பல பிரச்சினைகளை எதிர்கொண்டது. இலங்கைக்கு தேவையற்ற அபகீர்த்திகளை சந்திக்கவும் நேரிட்டது.  இந்த நிலையில் மேற்படி விடயங்களுடன் தொடர்புபட்டவரான பிள்ளையின் விஜயம் அமைந்துள்ளது.

நவநீதம்பிள்ளைக்கு வழமையான ராஜதந்திர அடிப்படையில் வசதிகள் வழங்கியிருந்தால் அதனைக் காரணம் காட்டி இலங்கை மீது மீண்டும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம்.இதனாலே அவருக்கு இராஜதந்திர வரையறைகளுக்கு அப்பால் சென்று அவருக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது தடவையாகவே அவர் இலங்கை வந்துள்ளார். முதற் தடவையாக நீலன் திருச்செல்வனின் முதலாவது நினைவு தின விழாவுக்கு இங்கு வந்தார். புலிகளால் நீலன் கொல்லப்பட்டதால் புலிகள் எவ்வளவு மோசமான கொலையாளிகள் என்பது அவருக்கும் தெரியும். சில புலம்பெயர் அமைப்புகளுக்கு சாதகமாக அவர் செயற்படுவதாக எமக்கு சந்தேகம் இருக்கவே செய்கிறது.

 இங்குள்ள உண்மை நிலைகளை கண்டு பிள்ளை பக்க சார்பற்ற தெளிவான அறிக்கையை வெளியிடுவார் என நம்புகிறோம் என்றார்.காணாமல் போன தமது உறவினர்களை தேடித்தருமாறும் அது குறித்து விசாரிக்குமாறும் பொதுமக்கள் நவநீதம் பிள்ளையிடம் கோரியுள்ளது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், புலிகளினால் பல ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தலதா மாளிகை முதல் காத்தான்குடி பள்ளிவாசல் வரை புலிகளால் செய்யப்பட்ட அழிவுகள் அநேகம். புலிகளின் இந்த மனித உரிமை மீறல்கள் குறித்து யாராவது விசாரிக்குமாறு கோரினரா? 12 ஆயிரம் முன்னாள் புலிகள் புனர்வாழ்வு அளித்து சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஜனநாயக வழிக்கு வந்த பின் மீண்டும் அவர்களை விசாரிப்பது நியாயமா? என்றார்.

இந்த மாநாட்டில் ஊடக அமைச்சின் கண்காணிப்பு எம்.பி.களான ஏ.எச்.எம். அஸ்வர், மனுஷ நாணயக்கார ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இலங்கையிலிருந்து கடல் வழியாக, பாக்., தீவிரவாதிகள், தென் தமிழகத்திற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தலாம் என்ற, மத்திய உளவுத் துறையின் எச்சரிக்கையை அடுத்து: கூடங்குளம் அணுமின் நிலையம் ஆளில்லாத விமானம் மூலம் கண்காணிப்பு!

Friday, August 30, 2013
சென்னை::திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலைய கண்காணிப்பில், ஆளில்லாத குட்டி விமானம் ஈடுபடுத்தப்பட உள்ளது. இலங்கையிலிருந்து கடல் வழியாக, பாக்., தீவிரவாதிகள், தென் தமிழகத்திற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தலாம் என்ற, மத்திய உளவுத் துறையின் எச்சரிக்கையை அடுத்து, கூடங்குளம் அணுமின் நிலையத்தில், ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
வான்வெளி தாக்குதலை தடுக்க, விமானப் படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை அண்ணா பல்கலை., மாணவர்கள் உருவாக்கியுள்ள, நவீன கேமராக்களுடன் கூடிய, ஆளில்லாத குட்டி விமானம் மூலம், அணுமின் நிலையம் கண்காணிக்கப்பட உள்ளது. அதற்கான செயல்முறை விளக்கம், கூடங்குளத்தில் நடந்தது.
 
ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்படும் இந்த விமானம், அணுமின் நிலையத்தைச் சுற்றி, 12 கி.மீ., தூரம் வரை பறந்து சென்று கண்காணித்து, புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை கட்டுப்பாட்டு அறைக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கும். உயரதிகாரிகளின் அனுமதி கிடைத்தவுடன், இந்த விமானம் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும்.

மனோ கணேசனின் கட்சியின் செயலாளர் முரளி இரகுநாதன் சுதந்திர கட்சியில் இணைவு!

Friday, August 30, 2013
இலங்கை::மனோ கணேசனின் கட்சியான ஜனநாயக தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான முரளி இரகுநாதன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
 
நேற்றைய தினம் அவர் பாராளுமன்ற சபை முதல்வரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவைச் சந்தித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதுடன் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்துக்குப் பூரண ஆதரவினை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.
 
புதய தொழிலாளர் கட்சியின் தலைவரான முரளி இரகுநாதன் தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைவதற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.
செய் நன்றி மறவாத தலைவரைக்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு ஆதரவு வழங்குவது எனது கடமையாகும். அதேவேளை எமது கட்சியின் தலைவர் மனோ கணேசனால் எனக்கு இழைக்கப் பட்ட அநீதி மற்றும் செயற்பாடுகளை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதும் ஒரு காரணமாகும்.
 
எதிர்வரும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் நானும் எனது கட்சியினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குப் பூரண ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். அமைச்சர் நிமல் சிறிபாலவுடனான இச் சந்திப்பில் நுவரெலிய மாவட்டத்தில் மாகாண சபைத் தேர்தலுக்குப் பொறுப்பாகவுள்ள போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கமவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Thursday, August 29, 2013

கிழக்கை வடக்குடன் இணைத்து நம்மை ஆட்டிப்படைக்க சதி மேற்கொள்ளப்படுகிறது: அதாவுல்லா!

Thursday, August 29, 2013
இலங்கை::கிழக்கு மாகாணத்தை மீண்டும் வடக்கு மாகாணத்துடன் இணைத்து வெளிநாடுகளின் தேவைக்கேற்ப நம்மை ஆட்டிப் படைப்பதற்கு சதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.
அதேவேளை, எமது சிறியதோரு நாட்டுக்கு மாகாண சபை முறைமை தேவை தானா என்ற நாம் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை உள்ளூர் ஆளுமை நிறுவனத்தின் ஏற்பாட்டில் தமிழ் மொழி மூலம் உள்ளூராட்சி டிப்ளோமா பாடநெறியை நிறைவு செய்த ஊழியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

உள்ளூர் ஆளுமை நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஐ.ஏ.ஹமீட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் மேலும் பேசுகையில்,
எமது நாடு சிறிய நாடாக இருந்தாலும் அழகிய இயற்கை வளங்கள் கூடுதலாகக் காணப்படும் நாடாக இருக்கின்றது.அனைத்துலக நாடுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எமது நாடு பிரதானமாக மூன்று இனங்களும் இரண்டு மொழிகளும் காணப்படுகின்றன. மற்றைய நாடுகளைப் பார்த்தால் நூற்றுக்கு மேற்பட்ட மொழிகளும் அதைவிட அதிகமான மதங்களும் காணப்படுகின்றன.

அவ்வாறு நூற்றுக்கு மேற்பட்ட மொழிகளும் மதங்களும் காணப்படுகின்ற நாடுகளிலுள்ள பிரச்சினைகளைவிட நமது நாட்டில் இனங்களுக்கிடையில் அதிகம் பிரச்சினை இருக்கின்றது.

இவற்றையெல்லாம் சில அரசியல் சக்திகள் திட்டமிட்டு உருவாக்குவதோடு, அதனூடாக இனங்களுக்கிடையில் அமைதியின்மையை ஏற்படுத்தி சமாதானம் நிலவுகின்ற எமது நாட்டை குழப்ப முயற்சிக்கின்றனர்.

நமது சிறிய நாட்டிற்குள் நாம் ஏன் இன ரீதியாக பிளவு படுகின்றோம் என்பதை சிந்தித்துப் பாருங்கள். சிங்களம்,தமிழ்,முஸ்லிம் என்று ஏன் ஒருவருக்கொருவர் முரண்படுகின்றோம். நாம் இலங்கையர்கள் என்ற உணர்வு இருக்க வேண்டும். அவரவரது மத உரிமைகளோடு வாழ வேண்டும். அதற்காக நாம் இனரீதியாக பிளவுபடக்கூடாது. மூவினங்களும் நிம்மதியாக வாழ வேண்டும்.