Tuesday, February 24, 2015

50 இராணுவப் படையணிகள் வடக்கிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது!

Tuesday, February 24, 2015
50 இராணுவப் படையணிகள் வடக்கிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் இவ்வாறு வடக்கில் நிலைநிறுத்தப்பட்டிருந்த படையணிகள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

2009ம் ஆண்டு மே மாதம் யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட போது மொத்தமாக 152 இராணுவப் படையணிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாககவும், இதில் சுமார் 50 படையணிகள் இதுவரையில் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வன்னியின் கிழக்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவில் காணிகளை சுவீகரித்து வைத்திருந்தனர் என சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், இந்தக் காணிகளை விடுவிக்குமாறு எவரும் கோரவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது.

யுத்த நிறைவின் பின்னர் இதுவரையில் வடக்கில் இராணுவம் வசமிருந்த 27000 ஏக்கர் காணிகள், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. யுத்த நிறைவின் பின்னர் 2010ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் முதல் இவ்வாறு இராணுவத்தினர் காணிகளை விடுவித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

Monday, February 23, 2015

இது கரும்புலிகளுக்கு விடுதலை கிடைக்கும், புலி பயங்கரவாதத்தை இல்லாதொழித்த தலைவர்களுக்கு, அதற்காக அர்ப்பணித்த மனிதர்களுக்கு அவர்களின் குடும்பம் பிள்ளைகளுக்கு சிறைவாசம் கிடைக்கும் யுகம்: விமல் வீரவன்ச!

Monday, February 23, 2015
இது கரும்புலிகளுக்கு விடுதலை கிடைக்கும், புலி பயங்கரவாதத்தை இல்லாதொழித்த தலைவர்களுக்கு, அதற்காக அர்ப்பணித்த மனிதர்களுக்கு அவர்களின் குடும்பம் பிள்ளைகளுக்கு சிறைவாசம் கிடைக்கும் யுகம். இதுவே இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
 
இன்று கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் அளித்துவிட்டு வெளியில் வந்த விமல் வீரவன்ச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
 
2011ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்கே நான் இன்று குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வந்தேன். எனது வாக்கு மூலங்களை குறித்த அதிகாரிகளிடம் நான் முன்வைத்தேன். இருந்தாலும் என்னை மீண்டும் அழைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. தேர்தல் நடைபெற்ற காலத்தில் பேரணியொன்றை நடத்தியமை குறித்தே இன்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. எனக்கும் முறைப்பாடுகள் செய்துள்ளார்கள் எனது மனைவிக்கும் முறைப்பாடுகள் செய்துள்ளார்கள். எதிர்காலத்தில் எனது பிள்ளைகளுக்கும் முறைப்பாடுகள் செய்யலாம்.
 
18ம் திகதி நுகேகொடையில் இடம்பெற்ற கூட்டத்திற்கு பின்னர் நல்லாட்சி அதிகாரிகள் அவநம்பிக்கையுடன் காணப்படுகின்றனர். நல்லாட்சி அதிகாரிகளின் இதயம் அதிகமாக துடிக்கும் சந்தர்ப்பங்களில் எங்களை இவ்வாறு அதிகமாக விசாரணைக்கு கொண்டுவர வேண்டிய அவசியமும் உள்ளது. எங்களுக்கு எதிராக சட்டத்தை பலப்படுத்த வேண்டிய அவசியமும் அதிகமாக உள்ளது. என்னையும் என் மனைவியையும் அல்லது பிள்ளைகளையும் எப்படியாவது சிக்க வைத்து எங்களது அரசியல் பயணத்தை நிறுத்துவதற்கான முயற்சியை இவர்கள் மேற்கொள்கின்றனர். ஆனால் கீழ்படிந்து மண்டியிட மாட்டோம். நாங்கள் தேர்ந்தெடுத்த முறையிலே எதிர்வரும் காலங்களில் அரசியல் பயணத்தை மேற்கொள்வோம்.
 
மனைவி மீதான போலியான கடவுச்சீட்டு குறித்து குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. எமது அரசியல் பயணத்தை நிறுத்துவதற்காகவே இவ்வாறான போலிக்குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். இந்த குற்றச்சாட்டுக்கள் போலியானவை என நாம் விரைவில் நீதிமன்றத்தில் நிரூபிப்போம்´ என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

வடக்கு அரசியல்வாதிகளின் தேவையைப் பூர்த்தி செய்யவும் சர்வதேச புலி ஆதரவு அமைப்புக்களை திருப்திப்படுத்தவுமே புதிய அரசாங்கம் தீர்மானித்து விட்டது!

Monday, February 23, 2015
வடக்கு அரசியல்வாதிகளின் தேவையைப் பூர்த்தி செய்யவும் சர்வதேச புலி ஆதரவு அமைப்புக்களை திருப்திப்படுத்தவுமே புதிய அரசாங்கம் போர்க்குற்ற விசாரணைகளை பலப்படுத்துவதாகவும், எமது தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவையும் இராணுவத்தினரையும் தண்டிக்க புதிய அரசு தீர்மானித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா.
 
புலி பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் மனித உரிமை மீறலாகாது. இலங்கையில் இடம்பெற்றது சிறுபான்மை மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அல்ல. முப்பது வருட காலம் இந்த நாட்டின் ஒற்றுமையினை சீரழித்த பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டமாகும். இதில் தமிழ், முஸ்லிம் சமூகம் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டதுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

திருகோணமலையில் கடற்படையின் கட்டுப்பாட்டில் தற்போது எவரும் இல்லை: கோசல வர்ணகுலசூரிய!

Monday, February 23, 2015
திருகோணமலையில் கடற்படையின் கட்டுப்பாட்டில் தற்போது எவரும் இல்லை என்று கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். திருகோணமலையில் 'கோத்தா' தடுப்பு முகாமில் 700 பேர் வரையிலும், திருகோணமலை கடற்படைத்தளத்தில் 35 குடும்பங்களும் தடுத்துவைக்கப்பட்டுள்ளன என்றும் இது தொடர்பில் புதிய அரசு உடன் விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
 
சுரேஷ் எம்.பியின் இந்த உரை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே கடற்படையின் ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
நான் அறிந்த வகையில் திருகோணமலை கடற்படை முகாமில் 35 குடும்பங்களோ அல்லது 700 தமிழர்களோ தடுப்பில் இல்லை. ஏனெனில் தற்போது கடற்படையின் தடுப்பில் எந்தவொரு நபரும் இல்லை. அத்துடன் 700 பேரை தடுத்துவைப்பதற்குரிய வசதிகளும் அங்கு இல்லை. திருகோணமலை கடற்படை முகாமில் 'கோத்தா' என்ற பெயரில் இடம் ஒன்று இருப்பதனை நான் அறியவில்லை. கோத்தாபய என்ற பெயரில் எமது கடற்படை முகாம் ஒன்று முல்லைத்தீவில் மட்டுமே உள்ளது. அங்கு 700 பேரையோ அல்லது 35 குடும்பங்களையோ கடற்படையினர் தடுப்பில் வைத்திருக்கவில்லை" என்றார்.

Tuesday, February 17, 2015

இலங்கை - இந்தியாவுக்கிடையில் பாதுகாப்பு, விவசாயம், அணுசக்தி உட்பட நான்கு முக்கிய ஒப்பந்தங்கள்கைச்சாத்து!

Tuesday, February 17, 2015
இலங்கை - இந்தியாவுக்கிடையில் பாதுகாப்பு, விவசாயம், அணுசக்தி உட்பட நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் நேற்று கைச்சாத்திடப்பட்டன.
 
இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தையையடுத்து இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
 
இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையிலான உத்தியோகபூர்வ இருதரப்புப் பேச்சுவார்த்தை பிரதமர் நரேந்திர மோடியின் ஹைதராபாத் இல்லத்தில் நேற்று நண்பகல் 12.00 மணியளவில் நடைபெற்றுள்ளது.
 
இதன் போது இரு நாடுகளுக்கு மிடையிலான நல்லுறவு, வர்த்தகம், மீனவர் விவகாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்படுவது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இணைந்து செய்தியாளர் மாநாடொன்றைக் கூட்டினர். அதன்போது இலங்கை - இந்தியாவுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து ஊடகவியலாளர் களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
 
இதன்போது கருத்துத் தெரிவித்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியாவுக்கான தமது விஜயமானது இரு நாடுகளுக்குமிடை யிலான உறவைப் பலப்படுத்துவதுடன் எதிர்காலத்திலும் இந்த உறவு பலமானதாகத் தொடரும் என தெரிவித்துள்ளார்.
 
தாம் ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவென்றும் அதற்காகத் தாம் இந்தியாவைத் தெரிவு செய்ததாகவும் குறிப்பிட்டதுடன் இந்திய விஜயம் தமக்குப் பெரும் திருப்திய ளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலான நல்லுறவு மேலும் வலுவடையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இரு தலைவர்களும் தீர்மானங்களை எடுத்துள்ளோம் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரிபால, பாதுகாப்பு மற்றும் கலாசார ரீதியில் இரு நாடுகளினதும் உறவு மேலும் பலமடையும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போது இந்தியப் பிரதமரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு நான் அழைப்பு விடுத்தேன். அதனை அவர் ஏற்றுக்கொண்டு இணக்கம் தெரிவித்தார். அந்த விஜயம் எமது இரு நாடுகளினதும் உறவுகளை மேலும் பலப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையானது இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக உள்ளது. இலங்கை ஜனாதிபதியுடனான இருதரப்புப் பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு பற்றியும் திருப்தியான வகையில் கலந்துரை யாடியுள்ளோம்.
இந்திய மக்களின் அன்பும் ஒத்துழைப்பும் என்றும் இலங்கை மக்களுக்கு உள்ளது.
நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தல் அந்நாட்டில் ஜனநாயகம் வலுவாக இருப்பதை பிரதிபலிப்பதாகவும் மோடி குறிப்பிட்டார். மைத்திரிபால சிறிசேனவுக்கு இலங்கை மக்கள் அளித்துள்ள வெற்றியின் மூலம் அவர்கள் ஒன்றுபட்ட அமைதியான வளர்ச்சியை விரும்புவதை எடுத்துரைத் துள்ளார்கள் என்றும் மோடி தெரிவித்தார்.

இந்தியா, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, தெற்காசிய நாடுகளில் அமைதியை நிலைநாட்டுவது. இரு நாடுகளுக்கும் இடையேயான பகுதியில் உள்ள கடல்வழி பாதுகாப்பு போன்றவை குறித்தும் இந்த சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மீனவர்கள் எடுக்கும் முடிவுக்கு இரு நாடுகளும் கட்டுப்படுவோம் என குறிப்பிட்ட இந்தியப் பிரதமர் இரு நாட்டு மீனவர்கள் விவகாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து பேசியதாகவும் இருநாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விவகாரம் இது என்பதால், இருநாட்டு மீனவ அமைப்புகளும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்த ஊக்குவிப்போம் என்றார்.
 
மீனவர்கள் எடுக்கும் முடிவுக்கு இருநாட்டு அரசாங்கங்களும் செயல்வடிவம் கொடுக்க உறுதிகொண்டுள்ளதாகவும் மோடி இதன்போது குறிப்பிட்டார்.
 
இறுதியாக தன்னை மைத்திரிபால சிறிசேன இலங்கைக்கு வருமாறு விடுத்துள்ள அழைப்பை ஏற்று எதிர்வரும் மார்ச் மாதம் தாம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்திய ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமரால் மகத்தான வரவேற்பளிக் கப்பட்டுள்ளது.
இராணுவ அணிவகுப்பு, மற்றும் 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு இலங்கை ஜனாதிபதி கெளரவிக்கப்பட்டார். அதனையடுத்து இரு நாட்டு ஜனாதிபதிகளுக்குமிடையில் நட்புபூர்வமான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
 
இச் சந்திப்பினையடுத்து புதுடில்லி யிலுள்ள பிராஜ்காட்பீடிலுள்ள மகாத்மா காந்தியின் சமாதிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
 
நேற்றைய தினம் இலங் கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான சிவில் பயன்பாட்டு அணுசக்தி ஒத்துழைப்பு, இந்திய நாளந்தா பல்கலைக்கழகத்தின் கிளைகளை இலங்கையில் ஸ்தாபிப்பது, விவசாயம், வர்த்தகம் மற்றும் கலாசா ரத்துறை கூட்டுறவு மேம்பாடு தொடர் பிலான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப் பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என கோரிக்கை!

Tuesday, February 17, 2015
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என சில தரப்பினரால் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில், மகிந்த ராஜபக்சவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என அந்த கட்சியின் பியமக தொகுதி மத்திய அதிகார சபை இன்று ஒருமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த இந்த கூட்டத்திற்கு பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார். கூட்டத்தில் சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டிருந்தனர்.