Tuesday, May 1, 2012

சூழ்ச்சிகளில் ஈடுபடும் நபர்களை மக்கள் தோற்கடிக்க வேண்டும்: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள மே தின செய்தியில்!

Tuesday, May, 01, 2012
இலங்கை::குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும் உழைக்கும் மக்களை அதளபாதளத்திற்குள் தள்ளவும் பல தோற்றங்களில் வந்து, சூழ்ச்சிகளில் ஈடுபடும் நபர்களை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வெளியிட்டுள்ள மே தின செய்தியில் இதனை அவர் கூறியுள்ளார்.

மிகவும் கௌரவமான முறையில் இம்முறை மே தினத்தை நாம் கொண்டாடுகிறோம். நாட்டின் பொருளாதாரத்தை 8.3 வீதமாக எம்மால் அதிகரிக்க முடிந்துள்ளது. இதற்கான மரியாதையும் மதிப்பும் இலங்கையின் உழைக்கும் மக்களுக்கே கிடைக்க வேண்டும். தற்போது நாடு நிரந்தர அபிவிருத்தியை நோக்கி பயணித்து வருகிறது.

30 வருடங்களாக உரிமைகளை இழந்திருந்த வடக்கு கிழக்கு மக்களுக்கு சுதந்திரமான தமது மே தினத்தை கொண்டாடும் உரிமை தற்போது கிடைத்துள்ளது. வடக்கு- தெற்கு என்றில்லாமல் அனைத்து உழைக்கும் மக்களையும் ஒரே தேசியக் கொடியின் கீழ் கொண்டுவது காலத்தின் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்...

தேசிய ஐக்கியத்தை பாதுகாப்பதிலும் அபிவிருத்தியை அடைவதிலும் உள்ள சவால்களை வெற்றி கொள்வதற்கு உழைக்கும் மக்கள் அரசாங்கத்திற்கு வழங்கிய ஒத்துழைப்பு தொடர்ந்தும் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவதற்கான அனைத்துப் பெருமைகளும் அதற்கு உந்து சக்தியாக செயற்படும் தொழிலாளர்களையே சாரும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாடு நிலையான அபிவிருத்தி பாதையில் பயணிப்பதாகவும், கிராமங்களும் நகரங்களும் வேறுபாடின்றி முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் மே தின வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உழைக்கும் மக்களின் தொழில், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலன்புரி விடயங்கள் தொடர்பான சட்ட திட்டங்கள் வரையப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாட்டின் இறைமையை பாதுகாப்பதுடன் பொருளாதார வெற்றியை உறுதி செய்யும் என்பதை, உழைக்கும் மக்கள் புரிந்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் உழைக்கும் மக்கள் வடக்கு, கிழக்கு, தெற்கு என பிரிந்திருக்காது அனைவரும் ஒரே தேசிய கொடியின் கீழ் நாட்டிற்காக ஒன்றிணைந்து இருப்பதை உறுதி செய்வது காலத்தின் பொறுப்பு என ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

unpயும்-tnaயும் இணைந்து நடத்தவுள்ள மே தினக் கூட்டத்தால் சர்வதேசத்துக்கு தவறான செய்தியே செல்லும் - தினேஷ் குணவர்த்தன!

Tuesday, May, 01, 2012
இலங்கை::யாழ்ப்பாணத்தில் மே தினக் கூட்டத்தை இணைந்து நடத்தவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் சம்பந்தனும் வடக்கில் மக்கள் அனுபவிக்கின்ற சுதந்திரத்தையும் அங்கு இடம்பெறுகின்ற பொருளாதார அபிவிருத்திகளையும் முதலில் கண்களைத் திறந்து பார்வையிடுமாறு கோருகின்றோம் என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் மேதினக் கூட்டத்தை நடத்தவுள்ளமை குறித்து கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவர் சம்பந்தனும் யாழ்ப்பாணத்தில் மே தினக் கூட்டத்தை இணைந்து நடத்தவுள்ளனர்.

இந்நிலையில் இந்தக் கூட்டத்தின் மூலம் என்ன நடக்கப்போகின்றது என்பதனை எம்மால் தற்போதே கூறிவிட முடியும். அதாவது இந்த இரண்டு தரப்பினரும் இணைந்து நடத்தவுள்ள கூட்டத்தின் ஊடாக சர்வதேசத்துக்கு தவறான செய்தியே செல்லும் என்பதனை நாங்கள் உறுதியாக கூறுகின்றோம்.

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர் க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரம சிங்டக வடக்கு பகுதிக்கு சென்று எவ்வாறான கூற்றுக்களை விடுத்தார் என்று அனைவருக்கும் தெரியும். அதனைப் போன்றே இம்றை மேதினக் கூட்டம் அமையும்.

இவர்களின் இந்த செயற்பாடு காரணமாக நாட்டுக்கோ அல்லது தமிழ் மக்களுக்கு எவ்விதமான நன்மையும் ஏற்படப்போவதில்லை. இதனை எம்மால் உறுதியாக கூற முடியும். யுத்தம் முடிந்துள்ள நிலையில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள உட்கட்டமைப்பு வதிகள் மற்றும் அபிவிருத்தி ஏற்பாடுகளை முதலில் பார்வையிடுங்கள். அதன் பின்னர் உங்கள் அரசியலை நடத்துங்கள் என்று அவர்களுக்கு கூறுகின்றோம் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்திற்கும் பீரிஸின் அமெரிக்க விஜயத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை - கருணாதிலக்க அமுனுகம!

Tuesday, May, 01, 2012
இலங்கை::ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப் பட்ட பிரேரணைக்கும் இம்மாதம் நடுப்பகுதியில் வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க விஜயத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார்.


அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனின் அழைப்பின் பேரில் இருதரப்பு பேச்சுக்களை மேற்கொள்ளவே வெளிவிவகார அமைச்சர் பேராசியர் பீரிஸ் அமெரிக்கா செல்கின்றார் என்றும் கருணாதிலக்க அமுனுகம மேலும் குறிப்பிட்டார். இம்மாதம் நடுப்பகுதியில் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டு அமெரிக்க மே மாதம் இரண்டாம் வாரமளவில் வெ ளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் அந்நாட்டின் இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனுடன் பேச்சுவார்த்தையும் நடத்தவுள்ளார்.

இதன் போது, யுத்தத் தின் பின்னரான இலங்கையில் அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றங்கள் நல்லிணக்க செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவான விளக்கத்தை அமெரிக்காவுக்கு அமைச்சர் பீரிஸ் வழங்கவுள்ளார்.

குறிப்பாக கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைறைப்படுத்துவது குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்படும். ஆனால் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கும் வெளிவிவகார அமைச்சரின் அமெரிக்க விஜயத்துக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை.

அமெக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனின் அழைப்பின் பேரில் இருதரப்பு பேச்சுக்களை மேற்கொள்ளவே வெளி விவகார அமைச்சர் பீரிஸ் அமெரிக்கா செல்கின்றார் என அமுனுகம தெரிவித்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்லாமல் கலை வாரியதாக ஐ.தே.க. விசனம்!

Tuesday, May, 01, 2012
இலங்கை::திட்டமிட்டபடி பத்திரிகையாளர் சந்திப்பிற்கு கூட்டமைப்பு செல்லாமையால் தனது கட்சிக்காரர்களுடன் கொபமடைந்த ரணில் பின்னர் மேல்மாடிக்கு சென்று ஓய்வு எடுத்துக்கொண்டார்.

கொழும்பினில் சுமந்திரன் மற்றும் சம்பந்தன போன்றவர்கள் போதிய ஒத்துழைப்பு வழங்குவதாக கூறினார்கள் கடைசியில் காலை வாரிவிட்டார்களென ரணில் மேலும் தெரிவித்தார்.

நேற்று காலை பத்து மணியளவினில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்ற பொது எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு தொடர்பிலான பத்திரிகையாளர் சந்திப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்திருந்தது. இந்தச் சம்பவத்தினால் ஆத்திரமடைந்N;த ரணில் தானும் பத்திரிகையாளர் சந்திப்பிற்குச் செல்லாமல் ஒதுங்கிக் கொண்டார்.

யாழ்ப்பாணத்தின் பிரபல விடுதி எக்ஸ்போவினில் இன்று பொது எதிர்க்கட்சிகளின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுவதாக ஏற்பாடாகியிருந்தது.

இச்சந்திப்பில் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் பங்கு கொள்வதாக முடிவாகியிருந்தது. இறுதிவரையில் வருகின்றோம் வருகின்றோம் என்று தெரிவித்துவந்த கூட்டமைப்பின் தலைவர்கள் இறுதி வரை வரவேயில்லை என்றும் இதனால் அச் சந்திப்பில் தாமும் கலந்து கொள்ளவில்லை என்றும் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் ஏனைய உறுப்பினர்களுக்கு தெரிவித்திருக்கின்றார்.

முன்னதாக நீண்ட நேரமாக காத்திருந்து பொறுமையிழந்த ரணில் வெளியே சென்று ஊடகவியலாளர்கள் காத்திருப்பதை பார்த்து பொறுமையிழந்து கோபமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கட்சியின் முக்கியஸ்தர் திஸ்ஸ அத்தநாயக்க தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றிருக்கின்றது.

பாதை புனரமைப்பு என்ற பெயரில் நாளை ஏ 9 நெடுஞ்சாலை போக்குவரத்துக்காக முடக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் தொழிலாளர் தினத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்குவதே நடைமுறை ஆனால் மேதினத்தினைக் குழம்பும் வகையில் தொழிலாளர்களை பணியில் அமர்த்தி மேதினத்தைக் குழப்ப அரசு முயல்வதாக திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியிருக்கின்றார்.

அதே வேளை ஒன்றித்த இலங்கையினுள் அனைத்து மககளும் சம உரிமையுடன் வாழ்வதற்கான கோசத்துடன் இம்மேதினத்தை கொண்டாடப்போவதாக ஜ.தே.க அறிவித்துள்ளது.

அம்பாறை அட்டாளைச்சேனை பிரதான வீதியில் துப்பாக்கிப் பிரயோகம் - குடும்பஸ்த்தர் படுகாயம்!

Tuesday, May, 01, 2012
இலங்கை::அம்பாறை அட்டாளைச்சேனை பிரதான வீதியில் நேற்று இரவு 7.30 மணிக்கு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் முஸ்லிம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தலைவரின் தம்பியாகிய முஹமது லெவ்பை நஜீப் (வயது 39) என்பவரே இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவராவார்.

காரில் சென்ற மேற்படி குடும்பஸ்தர் அட்டாளைச்சேனை பிரதான வீதியில் பாலத்தடிக்கு அண்மையில் காரை விட்டு இறங்கி நின்றபோதே ஆட்டோவில் வந்த சிலர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

நெஞ்சு உட்பட உடலின் பல இடங்களிலும் காயமடைந்த மேற்படி குடும்பஸ்தர் உடனடியாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆட்டோவில் வந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர்கள் தப்பிச் சென்றுகொண்டிருந்த போது அங்கு நின்ற சில இளைஞர்கள் ஆட்டோவைத் துரத்திச் சென்றுள்ளனர். ஆயினும் ஆட்டோ தப்பிச் சென்றுவிட்டது. துரத்திச் சென்ற மோட்டார்ச் சைக்கிளொன்று விபத்துக்குள்ளாகியதில் அதனைச் செலுத்திச் சென்ற இளைஞர் ஒருவரும் படுகாயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அட்டாளைச்சேனைப் பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ் வசம் உள்ளதும் சுடப்பட்டவர் மேற்படி பிரதேச சபைத் தலைவரின் தம்பி என்பதும்; இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்திய கடற்படை, விமானப்படைக்கு பிரத்யேக செயற்கைகோள் - ராணுவ அமைச்சர் அந்தோணி!

Tuesday, May, 01, 2012
புதுடில்லி:கடற்படை மற்றும் விமானப்படைக்காக பிரத்யேக செயற்கைக்கோள், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏவப்படும்,'' என, ராபுதுடில்லி:ணுவ அமைச்சர் அந்தோணி கூறினார்.

லோக்சபாவில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர் மேலும் கூறியதாவது:கடற்படைக்கான செயற்கைக்கோள், 2012-13ம் ஆண்டில் ஏவப்பட உள்ளது. விமானப்படைக்கான பிரத்யேக செயற்கைக்கோள் 2013-14ம் ஆண்டில் செலுத்தப்படும். மிக்-29மிரேஜ் - 2000, ஜாகுவார் போன்ற போர் விமானங்களை மேம்படுத்த, பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மிக் -29 ரக விமானங்களை மேம்படுத்துவது 2016ம் ஆண்டிற்குள்ளும், மிரேஜ் - 2000 ரக விமானங்களை மேம்படுத்துவது 2021க்குள், ஜாகுவார் ரக விமானங்களை மேம்படுத்துவது 2017ம் ஆண்டிற்குள்ளும் முடிவடையும்.இவ்வாறு அந்தோணி கூறினார்.