Monday, June 3, 2019

ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா இராஜினாமா!

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
 
மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ஆகியோர் தங்களது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
 
இவர்கள் சற்றுமுன்னரே இந்த கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர்.இதற்கமைய , ஆளுநர்கள் இருவராலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதங்களை ஜனாதிபதி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
 
மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி மற்றும்  அத்துடன் குறித்த இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக
பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது. இதன்போது இவ்வாறு இராஜினாமா கடிதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment