Friday, June 28, 2019

நம்பிக்கையில்லா தீர்மானம்: ஸ்டாலின் 'பல்டி'!

சபாநாயகர் தனபால் மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை தற்போது வலியுறுத்த போவதில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டசபை கூட்டத்தின் முதல் நாளான இன்று (ஜூன் 28) மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, கூட்டம் வரும் திங்கட்கிழமை (ஜூலை 1) க்கு ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், முந்தைய அரசியல் சூழலில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம். தற்போதைய சூழலில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுத்த அவசியமில்லை என கருதுகிறோம். சபாநாயகர் மீது கொடுத்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை, வாய்மொழியாக இன்று திமுக திரும்ப பெற்றது.

குடிநீர் பிரச்னைக்கு திமுக ஆட்சியில் வழங்கிய முக்கியத்துவம் போன்று அதிமுக ஆட்சியில் முக்கியத்துவம் கொடுக்காததால் தான் தமிழகத்தில் இத்தகைய தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சட்டசபை கூட்டம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை பொறுத்து பின்னர் முடிவு செய்வோம் என்றார்.
இடைத்தேர்தலுக்கு முன் சபாநாயகர் தனபாலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் அளித்திருந்தது திமுக.

No comments:

Post a Comment