Sunday, June 30, 2019

ரஷ்யாவுடன் ரூ.200 கோடியில் டாங்க் எதிர்ப்பு ஏவுகணை ஒப்பந்தம்!

ரஷ்யாவிடமிருந்து இந்தியா ரூ.200 கோடிக்கு நவீன டாங்க் எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளது...எம்.ஐ.- 35 ஹெலிகாப்டர்...இந்தியாவின் எம்.ஐ.35 போர் ஹெலிகாப்டர்களில் பொருத்தி ஏவுவதற்கு ஏற்றாற்போன்றவை இந்த ஏவுகணைகள். இந்திய விமானப்படையின் பழமையான அமெரிக்க வகை அப்பாச்சி கன்சிப்ஸ்ஐ மாற்றிவிட்டு, இந்தவகை ஏவுகணைகள் பொருத்தப்பட உள்ளன...ஏவுகணை ஒப்பந்தம் :.கடந்த வாரம் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர அனுமதியை இந்தஒப்பந்தத்திற்கு வழங்கியுள்ளார். இந்திய விமானப்படை அவசரகாலத்தில்
திடீரென ஏற்படும் போர்களை சமாளிக்க எம்.ஐ., வகை ஹெலிகாப்டர்களையும், தற்போது ரஷ்யாவிடமிருந்து வாங்க உள்ள ஏவுகணைகளையும் பயன்படுத்தும்...300 கோடி ரூபாய்...நமது நாட்டின் முப்படைகளுக்கும் 3 மாதகால இடைவெளியில் 300 கோடி ரூபாய் வரையிலான போர்க்கருவிகளை வாங்கிக்கொள்ளும் அனுமதி எப்போதும் உண்டு என்று அரசு உயரதிகாரிகள் கூறுகின்றனர்...சிறப்பு அதிகாரம் :.இந்த சிறப்பு அதிகாரம், கடந்த பிப்ரவரி மாதத்தில் புல்வாமாவில் பயங்கரவாதிகள் சிஆர்பிஎப் மீது நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு பின்னர் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment