Sunday, May 19, 2019

அச்சமில்லாமல் பௌத்த மக்கள் வெசாக் நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும்: மஹிந்த ராஜபக்ஸ! Photos

அச்சமில்லாமல் பௌத்த மக்கள் வெசாக் நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், பாதுகாப்புப் பிரிவும், அரசாங்கமும் பாதுகாப்பு தொடர்பில் கூடிய கரிசணை காட்ட வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க் கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்று  தங்கல்லை கால்டன் வீட்டில் நடைபெற்ற தர்ம போதனை நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
 
இன்று நாட்டு மக்களின் முழு வாழ்க்கையும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. எமது நாடு சீரான நிலைமைக்கு வந்துள்ளது என்பது
ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. எமது நாடு சீரான நிலைமைக்கு வந்துள்ளது என்பது வெளிநாட்டவர்களுக்கு விளங்க வேண்டும். தகவல் கொடுக்கப்படும் விடயங்களை வெளிக்காட்ட வேண்டும் எனும் போது மக்களிடம் சந்தேகம் எழுகின்றது.வாய்ப் பேச்சின் காரணமாக மக்களிடையே சந்தேகம் வளர்கின்றது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும். கடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் என்பது இதுவரையில் தெரியாது. நாம் ஆரம்பத்தில் சொன்ன தகவல்களை பின்னர் மாற்றிவிட்டனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment