Saturday, May 18, 2019

இந்திய உயர் ஸ்தானிகர் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம்! Photos

இந்திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து நேற்று  கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து அங்கு தனது வணக்கங்களைச் செலுத்தியதுடன் மல்வத்த பீடத்தின் அதி வணக்கத்திற்குரிய திப்பெட்டுவாவெ ஸ்ரீ சுமங்கல மகாநாயக்க தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் அதி வணக்கத்திற்குரிய வராக்காகொட ஸ்ரீ ஞானரத்ன மகாநாயக்க தேரர் ஆகியோரிடம் ஆசிகளைப் பெற...்றுக் கொண்டார்.
 
மகா நாயக்க தேரர்களுடனான அவரது சந்திப்பின் போது, உயர் ஸ்தானிகர் புனித வெசாக் வைபவம் தொடர்பாக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் 2017 இல் சர்வதேச வெசாக் தினத்திற்காக பிரதம மந்திரி ஸ்ரீ நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்ததையும் மற்றும் 2018 இல் சாராநாத் புனித சின்னங்களைக் காட்சிப்படுத்தியதையும் நினைவுபடுத்தினார்.

உயர் ஸ்தானிகர் மகாநாயக்க தேரர்களுடன் தற்போதைய நாட்டு நிலவரம் பற்றிக் கலந்துரையாடியதுடன் அடிப்படைவாதம் மற்றும் மதத் தீவிரவாதம் ஆகிய பீடைகளை எதிர்கொள்வதில், நடு வழியில் செல்லும் பௌத்த கோட்பாடுகள் பற்றியும் குறிப்பிட்டார்.  ஜிகாதி பயங்கரவாதம் எனும் பொதுவான அச்சுறுத்தலைக் கையாள்வதில் இலங்கைக்கு இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பையும் இதன் போது அவர் உறுதிப்படுத்தினார்.
 
மகாநாயக்க தேரர்களுடனான சந்திப்பின் பின்னர், உயர் ஸ்தானிகர் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன், கண்டி புனித தந்த ஸ்ரீ தலதா மாளிகைத் தேவாலயத்திற்காக, கண்டி-பல்லேக்கல சர்வதேச பௌத்த அக்கடமிக்காக இலங்கை நாணயத்தில் 150 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கண்டிய நடனப் பாடசாலையின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கு விஜயம் செய்தார்.

No comments:

Post a Comment