Friday, May 17, 2019

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் பயங்கரவாதி சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய மேலும் இருவர் கைது!

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர், சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹொரவபொத்தானை பகுதியில் வைத்து காவல்துறை அதிரடிப்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : கைதான 78 பேரில் 20 பேர் நேரடி தொடர்பு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதான 78 பேரில் 20 பேர் அதனுடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.குறித்த 20 பேரிடமும் தற்போது விசாரணை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.கைதானவர்களிடம் பெறப்படும் தகவல்களுக்கு அமைய மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment