Monday, May 20, 2019

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை(21) சபாநாயகரிடம்!

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை நாளை (21) பாநாயகர் கரு ஜயசூரியவிடம் சமர்பிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்

நாட்டு மக்களின் பாதுகாப்பை இல்லாது செய்தமைக்கான முழு பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்ளவேண்டும்.எனவே இந்த அரசாங்கத்தை பதவியில் இருந்து விலக்க வேண்டும். எந்த பிரச்சினைகள் ஏற்பட்டாலும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஒவ்வொறு பக்கமும் தனித்தே செயல்பட்டு வருகின்றனர்.இந்தநிலையில் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள அவநம்பிக்கை பிரேணைக்கு சகல கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் அநுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற அவநம்பிக்கை பிரேரணைக்கு முன்னர், அரசாங்கத்திற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது தொடர்பில், எதிர்கட்சித் தலைவருடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, ரிஷாத் பதியூதீனுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள அவநம்பிக்கை பிரேரணை குறித்தும் தமது கட்சி உரிய தீர்மானம் மேற்கொள்ளும் என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே, அதன் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment