Monday, May 20, 2019

புலிகளின் பயங்கரவாத யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 10 வருட பூர்த்தியை முன்னிட்டு மகிந்த ராஜபக்ஷ மீண்டும் தமிழில்..video

                    Mahinda Rajapakshe again in Tamil...I will say, I will say what I do.
போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 10 வருட பூர்த்தியை முன்னிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ  நேற்று விசேட உரை நிகழ்த்தியுள்ளார்.விஜேராமவிலுள்ள தமது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் இந்த விசேட உரையை ஆற்றியுள்ளார்.

இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையின்போது எந்தவொரு போர்க் குற்றமும் நடைபெறவில்லை என்பதை யுத்த வெற்றியின் 10ஆவது வருட பூர்த்தியில் நான் பகிரங்கமாகக் கூற விரும்புகின்றேன். உலகின் ஆயுதப் பிரச்சினைகளுக்கு தாக்கம் செலுத்தும் வகையிலான சட்டம் உருவாக்கப்பட்டது. யுத்தத்தில் ஈடுபட முடியாதவாறல்ல. யுத்தத்தில் ஈடுபடக்கூடிய வகையிலேயே அது உருவாக்கப்பட்டுள்ளது. போர்ச் சட்டத்தை அவ்வாறே பேணிச்செல்வது அமெரிக்கா தலைமையிலான சில நாடுகள் என கூறவும் வேண்டும். மேற்குலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் போர்ச்சட்டங்களுக்கு அமைய, இலங்கையில் எந்தவொரு போர்க் குற்றமும் இடம்பெறவில்லை என்பதை நான் மீண்டும் கூறுகின்றதாக, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, யுத்த காலத்தில் இலங்கை எதிர்நோக்கிய வௌிநாட்டு அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் இதன்போது அவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.சில நாடுகள் யுத்தத்தை நிறுத்துமாறு விடுத்த அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே நாம் புலிப் பயங்கரவாதத்திற்கு எதிராக முன்னெடுத்த போராட்டத்தை வெற்றிகொண்டோம். நாம் நேரடியாகவே நிராகரித்ததன் காரணமாகவே அது சாத்தியமானது. அமெரிக்காவின் குடியரசுக் கட்சியினால் எமக்கு பல உதவிகள் கிடைத்தன. அதனை கூற வேண்டும். அமெரிக்கா உதவியதன் காரணமாகவே, 2006ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தினூடாக புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்த முடிந்தது. அமெரிக்காவினால் வழங்கப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட தகவலின் காரணகமாகவே, 2007இல் புலிகள் அமைப்பின் ஆயுதக் கப்பலை அவுஸ்திரேலியா, இந்தோனிஷியாவிற்கு அண்மித்த கடற்பரப்பில் எம்மால் அழிக்க முடிந்தது. எனினும், 2009 பெப்ரவரி மாத்திலிருந்து அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியொருவர் நியமிக்கப்பட்டார்.
 
அதன்போது அவர்களின் எண்ணக்கரு மாற்றமடைந்தது. எனினும், நாம் சர்வதேச அச்சுறுத்தல்களைக் கருத்தில்கொள்ளாது யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தோம். எனினும், இலங்கையில் யுத்தம் முடிந்ததன் பின்னர் இந்நாட்டில் அமைதி உருவாதற்கு சர்வதேச மற்றும் உள்நாட்டு சக்திகள் இடமளிக்கவில்லை. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நாளிலிருந்து கடந்த காலத்தை நினைவூட்டி, எவ்வகையிலேனும் மோதனைப் பேணுவதையே அவர்கள் முன்னெடுத்தனர். தம்மை செவிமடுக்காது யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததாக பிரச்சினையை ஏற்படுத்தினர். சீனா எமக்கு உதவுகின்றது என்பதும் அவர்களுக்கு பிரச்சினையாக இருந்ததாகவும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
மேலும், இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தமிழிலும் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

புலிகளின் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 10 வருட பூர்த்தியை முன்னிட்டு மகிந்த ராஜபக்ஷ மீண்டும் தமிழில்...நான் சொல்வதை செய்வேன், செய்வதை சொல்வேன்! video 

1 comment: