Friday, March 17, 2017

ஸ்காட்லாந்து விடுதலை: மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நிராகரிப்பு?

பிரெக்ஸிட்டுக்கு முன்னதாக ஸ்காட்லாந்து விடுதலை பற்றிய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பிரிட்டிஷ் அரசு நிராகரிக்க உள்ளது.
 
ஸ்காட்லாந்து விடுதலை பெறுவதற்கு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த இது சரியான நேரமல்ல" என்று பிரிட்டன் பிரதமர் தெரிசா மே கூறியிருக்கிறார்.
 
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும்போது, பிரிட்டன் முழுவதற்குமான ஒரு நல்ல ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கிடைப்பதில் இப்போது கவனம் செலுத்தப்பட வேண்டும்" என்று பிரதமர் தெரீசா மே கூறியிருக்கிறார்.
 
2019 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்வைக்கப்பட்ட நிக்கோலா ஸ்டர்ஜனின் கோரிக்கை முற்றிலும் நிராகரிக்கப்படும் என்று ஸ்காட்லாந்து கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் ரூத் டேவிட்சன் தெரிவித்திருந்தார்.
 
மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை தடுப்பது "ஜனநாயக அட்டூழியமாக" இருக்கும் என்று ஸ்டர்ஜன் கருத்து தெரிவித்திருக்கிறார்.
 
ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட, ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருக்கும் அரசின் செயல்பாட்டை, பிரிட்டிஷ் அரசு தடுக்க உரிமை இருக்கிறது என்று நினைப்பது, சுருங்க சொன்னால், இது விடுதலை பெறுவதற்கான ஒரு வாதமாகும்" என்று ஸ்காட்லாந்தின் முதன்மை அமைச்சர் ஸ்டர்ஜன் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்
 
வரலாறு இந்த நாளை திருப்பி பார்த்து, ஒன்றியத்தின் இருப்பை முடித்துவிட்ட நாளாக பார்க்கும்" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
 
ஐரோப்பிய ஒன்றியத்தோடு பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளை ஐக்கிய ராஜ்ஜியம் நடத்துகின்ற அதேவேளையில், 2018 ஆம் ஆண்டு இலையுதிர் காலம் அல்லது வசந்த காலத்தில் ஸ்காட்லாந்தில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஸ்டர்ஜன் கோரிக்கை விடுத்திருந்தார்.

No comments:

Post a Comment