Friday, March 17, 2017

இலங்கைக்கு வந்த கோடிக்கணக்கான பணம் இல்லாது போயுள்ளது : மஹிந்த ராஜபக்ஷ!

பாதுகாப்பு விடயத்தில் காணப்படும் முரண்பாடுகளை அரசாங்கம் தாமதமாக புரிந்துகொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
நிட்டம்புவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இதன்போது, கடற்கொள்ளையர்களின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடுள்ள அவர்,
 
கடற்பகுதியில் இடம்பெறும் கடத்தல்களை அவன்கர்ட்  நிறுவனம் நிறுத்தியிருந்தது.
 
உரிமையாளர் எவராக இருந்தாலும், அவன் கார்ட் என்பது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நிறுவனமாகும்.
 
இதனூடாக இலங்கையர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, சுமார் 150 கப்பல்களுக்கு எல்லா சந்தர்ப்பங்களிலும் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
 
இவ்வாறான நிலையில், குறித்த விடயம் தொடர்பில் சர்வதேச ரீதியாக இணைந்து அமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
 
சர்வதேச ரீதியில் அல்ல, இலங்கையால் உருவாக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பை வழங்கினர்.
 
இந்த நிலையில், அவர்களை இதிலிருந்து நீக்கியதால், இலங்கைக்கு வந்த கோடிக்கணக்கான பணம் இல்லாது போயுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment