Friday, January 20, 2017

அவசர சட்டம் வந்தால் வழக்கு: 'பீட்டா'!

சுப்ரீம் கோர்ட்டால் தடை செய்யப் பட்டுள்ள, ஜல்லிக்கட்டை நடத்து வதற்கு, அவசர சட்டம் கொண்டு வந்தால், அதை எதிர்த்து வழக்கு தொடருவோம்,'' என, விலங்கு கள் நல அமைப்பான, 'பீட்டா'வின் செய்தித் தொடர்பாளர் மணிலால்வலியாதே தெரிவித்தார்.
 
இது குறித்து, அவர் கூறியதாவது:

அனைத்து விலங்குகளுக்கு எதிரான வதையை எதிர்த்தே, நாங்கள் பிரசாரம் செய்து வருகி றோம். அது போல தான், காளைகளை வதைக் கக் கூடாது என, போராடுகிறோம். ஜல்லிக்கட்டு என்பதே, காளைகளை வதைப்பது தான்.

கடந்த, 1980களில், கலப்பின மாடுகள் பெருக்கத்தை அரசு ஆதரித்தது. அந்த காலத்திலும் ஜல்லிக்கட்டு இருந்தது. ஆனால்,
 
கலப்பின பெருக்கம் அதிகமானது தான், உள்நாட்டு காளை இனங்கள் குறைவதற்கு காரணம். உள்நாட்டு வகைகளை வளர்ப்பதற் கும், பாதுகாப்பதற்கும், பல்வேறு வழிமுறைகள் உள்ளன; ஜல்லிக்கட்டு தான் ஒரே வழியல்ல.
அந்த வகையில், சுப்ரீம் கோர்ட்டால் தடை விதிக்கப்பட்டுள்ள, ஜல்லிக் கட்டை நடத்து வதற்கு ஆதரவு தெரிவித்து, மத்திய அரசு அவசரசட்டம் கொண்டு வந்தால், அதை எதிர்த்து வழக்கு தொடருவோம். காளைகள் உட்பட, விலங்குகள் வதை செய்யப்படுவதை எதிர்த்து, தொடர்ந்து செயல்படுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

வெளிநாடுகளில் போராட்டம் :

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து,தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து, டில்லி உட்பட, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், ஆர்ப் பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களும், ஜல்லிக் கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இலங்கை, பிரிட்டன், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர்கள், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐகோர்ட்டை அணுக உத்தரவு :

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, தமிழகத்தில் நடந்து வரும்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு,
 
போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, சென்னை ஐகோர்ட்டில் முன்வைக்கும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதர வாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மாணவர் கள் நடத்தி வரும் போராட்டம், மூன்றாவது நாளை எட்டியுள்ளளது.

இந்நிலையில், மூத்த வழக்கறிஞர், என்.ராஜாராமன் உள்ளிட்டோர், 'போராட்டக் காரர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும்' என, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமை யிலான அமர்விடம் வலியுறுத்தினர். 'இது தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டில் முறை யிடுங்கள்' என, சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியுள்ளது.  

No comments:

Post a Comment